சாதி பெயர் கொண்ட படங்களுக்கு தடை விதியுங்கள்.. முதல்வருக்கு சீனு ராமசாமி திடீர் கோரிக்கை
சென்னை: சாதி பெயர் கொண்ட பாடல்கள், படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வரிடம் இயக்குநர் சீனுராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிடோர் நடித்த மாமன்னன் படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் முதல்முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர். நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தமிழகத்தில் சாதி பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அண்மையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் பேசிய மாரி செல்வராஜ், தேவர் மகன் திரைப்படம் எனக்குள் மனபிறழ்வை உண்டாக்கியது என பேசியிருந்தார். இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த விழாவில் கமல்ஹாசன் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications