மதுரை டூ சென்னை விமானத்தில் பர்ஸை மிஸ் செய்த இயக்குநர் செல்வராகவன்.. 15 நிமிடங்களில் நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் செல்வராகவன் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது தன்னுடைய பர்ஸை தொலைத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவருடைய பர்ஸ் பத்திரமாக கிடைத்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலின் முன்னாள் கணவர், தனுஷின் அண்ணன் உள்ளிட்ட பல அடையாளங்கள் அவருக்கு உண்டு. தனுஷ் நடிப்பில் உருவான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் செல்வராகவன்.

Director Selvaraghavan missed his purse in flight

இதைத் தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார். இவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவருடைய படங்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சாணி காகிதம், பகாசுரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தனுஷின் டி50 படத்திலும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். நடித்துக் கொண்டிருந்தாலும் பழைய படங்களின் பார்ட் 2 வை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது இன்று மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் எனது பர்ஸை தவறவிட்டுவிட்டேன்.

அது தொலைந்த 15 நிமிடங்களில் ஏர் இந்தியா நிறுவனத்தினர் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்களுக்கு ஈமெயில் மூலம் எனது விவரங்களை அனுப்பியிருந்தேன். இதைத் தொடர்ந்து என்னுடைய பர்ஸ் திரும்ப பெறப்பட்டது. அவர்களின் சேவையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் நன்றி ஏர் இந்தியா என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+