Madhan bob demise: “நெருங்கியவர்கள் விட்டுட்டு போறதை ஏத்துக்க முடியல" மதன் பாபு மறைவுக்கு கலங்கிய இயக்குநர் சுராஜ்!
சென்னை: பிரபல குணச்சித்திர நடிகரான மதன் பாபு இன்று உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதன் பாபு மறைவு குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த இயக்குநர் சுராஜ், "நெருங்கியவர்கள் இப்படி விட்டுட்டு போறத ஏத்துக்க முடியல" என கலங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகம் பல கலைஞர்களை கொடுத்திருக்கிறது. அதில் ஒரு சிலர்தான் அத்தி பூத்தார் போல மக்கள் மனதில் நிலைத்து நின்றிருக்கிறார்கள். அப்படியானவர்களில் நடிகர் மதன் பாப் எனும் மதன் பாபும் ஒருவர். இவரது சிரிப்புக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சந்திரமுகி படத்தில் சிரித்துக்கொண்டே "10 லட்ச ரூபாய் கார்.. உனக்கு சலுன் கடையா?" என்று கேட்கும் வசனம் டாப் டக்கர்.

"உள்ள என்ன இருக்கு நான் பாக்கனும்?", "இதோ வந்துட்டேன்" போன்ற டயலாக்குகள் இவருக்கு தனி அடையாளத்தையே கொடுத்தது. அதிலும் பிரன்ட்ஸ் படத்தில் இவர் வரும் காட்சிகள் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தனர். அப்படியான கலைஞனின் உயிரை இன்று புற்றுநோய் பறித்து சென்றிருக்கிறது.
இவரது மறைவு குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த இயக்குநர் சுராஜ், "என் கூட படிக்காதவன் திரைப்படம் பணியாற்றுகின்றார். மாப்பிள்ளை மற்றும் கத்தி சண்டை என பல திரைப்படங்களில் என்னுடன் அவர் பணியாற்று இருக்கிறார். திரைப்படங்களை தாண்டி எனக்கும் அவருக்குமான நெருக்கம் என்பது ஆழ்ந்த நட்பாக இருந்தது. அவருடைய அடையார் வீட்டிற்கு என்னை அடிக்கடி அழைப்பார். அவருடைய மகள் என்னுடைய திரைப்படத்தில் ஒரு பாடலை கூட பாடி இருக்கிறார். அவருடைய மகள் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஏ ஆர் ரகுமான் உடன் கூட பணியாற்றியிருந்தார்.
மதன் பாபு சன் டிவியில் 'அசத்தப்போவது யாரு' என்கிற நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். அது மிகவும் ஃபேமஸ் ஆக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். மிகவும் நல்ல மனிதர். ஆனால் இன்று அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அவருக்கு புற்றுநோய் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுதான் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரித்தே சினிமாவில் ஜெயித்தவர் அவர். அவருக்கும் எனக்குமான நட்பு, 'கிரி' என்றும் திரைப்படத்தில் இருந்துதான் தொடங்கியது. அந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியிருந்தார். அதில் நான் துணை இயக்குனராக பணியாற்றியிருந்தேன். அப்பொழுது மதன் பாப் சிறப்பான தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார். அப்போது முதல் எனக்கும் அவருக்குமான நட்பு தொடங்கியது. பின் நாட்களில் நான் இயக்குனராக வந்த போது எனது திரைப்படங்களில் அவருக்கு என தனி இடம் ஒதுக்கியிருந்தேன்.
இயல்பாகவே அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதர். திரைப்படத்தைக் கடந்து பொதுவாழ்வில் கூட மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். படப்பிடிப்பு தளங்களில் சக நடிகர்களிடம் மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் பேசி பழகியவர். நடிப்பு என்பதை தாண்டி அவருக்கு மேஜிக்கில் தனி ஆர்வம் இருந்தது. எங்களிடம் அடிக்கடி அவர் மேஜிக் செய்து காட்டுவார். நெருங்கியவர்கள் எல்லாம் தவறிக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications