அஜித் நல்லா இருக்கணும்.. அரசியலில் நிம்மதி இருக்காது.. அன்று நான் அழைத்தது தவறு.. பிரபல இயக்குநர்
சென்னை: அஜித் நல்லவர், அவர் நல்லா இருக்கணும், அரசியலில் நிம்மதி இருக்காது என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
வீரபாண்டிபுரம் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், அஜித் நல்லவர், அவர் நல்லா இருக்கணும், அஜித் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அரசியலில் நிம்மதி இருக்காது. ஒரு நாள் ட்விட்டரில் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என சொன்னேன். அது தப்பு என்று இப்போது தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.

விஜய்
ரஜினிகாந்த், விஜய், சிம்புவை போல் நடிகர் அஜித்தையும் அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வந்தார்கள். இதில் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வர போவதில்லை என கூறிவிட்டார். விஜய் தற்போதுதான் அவரது மக்கள் இயக்கத்தினரை அரசியலில் நிற்க வைத்து ஆழம் பார்த்து வருகிறார்.

அஜித்
சிம்பு அரசியலுக்கு வர வேண்டும் என அவரது தந்தை டி ராஜேந்தர் விரும்புகிறார். டி ராஜேந்தர் லட்சிய திமுக என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவரது கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயார்படுத்தி வருவதாக அண்மையில் நடந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அஜித்தை அவரது ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

கோரிக்கை
ஆனால் அஜித் அதற்கு பிடிகொடுக்கவில்லை. அவர் அரசியலுக்கு வருவதையும் விரும்பவில்லை. அவர் தான் நடித்து வரும் திரைப்படங்களில் கூட அரசியல் பின்புலத்தை எடுப்பதில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த விழாவில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். அப்போதைய பாஜக தலைவராக இருந்த தமிழிசை, அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.

அஜித் நேர்மையானவர்
அதாவது பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே நீங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும். மோடி தொண்டர்களாக நீங்கள் மாறி தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும். சினிமா கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித்தான். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளனர் என்றார் தமிழிசை.

வாழு வாழவிடு
இதையடுத்து அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் எனது தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே. என் மீதோ என் ரசிகர்கள் மீதோ எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்று நான் சிந்தித்து ரசிகர் இயக்கங்களை கலைத்தேன். அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை ரசிகர்கள் மீது திணிப்பது இல்லை. என் பெயரோ புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை என்றார். மேலும் இறுதியில் வாழு வாழ விடு என அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications