விசுவை போல் குடும்ப படங்களை எடுத்தவர்! சுகாதார துறையில் மலேரியா தடுப்பு அதிகாரி! யார் இந்த வி.சேகர்?
சென்னை: இயக்குநர் விசுவை போல் குடும்ப படங்களை இயக்கியவர் வி.சேகர். இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றியவர். அந்த வேலையை விட்டு சினிமாவுக்குள் வந்து ஆபாசமில்லாத படங்களை இயக்கி மக்கள் மனங்களை கொள்ளையடித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், நெய்வாநத்தம் கிராமத்தில் பிறந்தார். திருவண்ணாமலையில் பியூசி படித்துவிட்டு பி.ஏ. பட்டம் பெற்றார். இவர் மாநகராட்சி சுகாதாரத் துறையில் மலேரியா தடுப்பு அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.

சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் அவர் படத்தொகுப்பாளர் லெனினிடம் உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார். அங்கிருந்து பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இதையடுத்து கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
வெற்றி இல்லை
பிறகு படங்களை இயக்க முயன்ற போது அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் சுகாதாரத் துறை பணிக்கே திரும்பினாராம். அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்த அவருக்கு வெற்றிகள் குவிந்தன. திரைப்படங்களை இயக்கியதோடு சில சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார்.
முதல் படம்
இயக்கம், தயாரிப்பு தாண்டி நடிகராகவும் அவதாரம் எடுத்தார். 1990ஆம் ஆண்டு "நீங்களும் ஹீரோதான்" என்ற படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமானார். நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
விசுவை போல்
விசுவை போலவே குடும்பப் பாங்கான, நடுத்தர குடும்பங்களை மையமாக வைத்து படம் எடுத்தார். இவரது படங்களை காண மக்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வந்தனர். இவரது படங்கள் ஹிட்டடித்தன. குடும்ப பிரச்சினைகளை தனது படங்களில் சொல்வார்.
கூட்டுக் குடும்பம்
எப்படி இருக்கணும், எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதையும் சொல்வார். கூட்டுக் குடும்பங்களால் உள்ள நன்மைகளையும் அதன் அழகையும் வெளிப்படுத்தியிருந்தார். "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்" படத்தில் மனைவி பேச்சை மதித்து கணவர் நடக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருப்பார் வி.சேகர்.
"ஒன்னா இருக்க கத்துக்கனும்" இது இன்னொரு நல்ல கதையம்சம் கொண்ட படம். கல்வி அறிவு ஒரு மனிதனுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கிய படம்.
சிக்கனத்தின் தேவை
"வரவு எட்டணா செலவு பத்தணா" படம் சிக்கனத்தின் தேவையை விளக்கியது. குடும்பத் தலைவன் தடம் மாறுவது எவ்வளவு தவறோ.. அதே போல குடும்பத் தலைவியும், குடும்பத் தலைவனை தவறு செய்ய தூண்டுவது அதை விட பெரிய தவறாகி சிறை செல்ல நேரிடும் என்பதை விளக்கிய படம் இது.
ஆணாதிக்க படம்
"காலம் மாறிப் போச்சு" என்ற படத்தில் பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் நடமாடும் தந்தையர்களுக்கும், சகோதரிகளின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாமல் நடமாடும் பொறுப்பற்ற சகோதரர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுத்த படம் இது. பெண்களை அடிமையாக வைத்திருக்கக் கூடாது என்பதை உணர்த்திய படம்.
வி.சேகர் காலமானார்
இவர் பல படங்களை இயக்கிய நிலையில் "பள்ளிக்கூடம்", "எங்க ராசி நல்ல ராசி" ஆகிய படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில், சார்லி, விவேக், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட காமெடியன்களை வைத்து படம் எடுத்துள்ளார். திருவள்ளுவர் கலைக்கூடம் என்ற பெயரில் குடும்பப் படங்களைக் கொடுத்த வி.சேகர், கடந்த 10 நாட்களாக ஆபத்தான நிலையில் இருந்து சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
நாளை இறுதிச் சடங்கு
வி. சேகருக்கு தமிழ்ச் செல்வி என்ற மனைவியும், மலர்க்கொடி என்கிற மகளும், காரல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர். சேகர் உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்படுகிறது. நாளை இறுதிச்சடங்கு என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications