வாக்கி டாக்கியுடன் விக்னேஷ் சிவன்.. ஓ செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கும் இவர்தான் இயக்குநரா?
சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவையும் விளம்பர படத்தைதை வடிவமைத்த விக்னேஷ் சிவனே இயக்கி வருகிறார்.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் சென்னையில் இன்று தொடங்கி இருக்கிறது. மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்கின்றனர்.
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக நடந்து முடிந்துள்ளன. நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை தமிழ்நாடு அரசு பிரபலப்படுத்தியும் வருகிறது.

ஏற்பாடுகள்
இந்த போட்டிக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான சிறப்பான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை தந்து இருக்கிறார்.

பிரபலங்கள்
பிரதமரின் வருகை சற்று தாமதமானாலும் குறித்த நேரத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா தொடங்கி இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யனாதன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க மற்ற தமிழ்நாடு அமைச்சர்களுக்கு என தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் சினிமா பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அணி வகுப்பு
இதில் அணிவகுத்த 186 நாடுகளை சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தன. ஆனால், இந்தியாவிலிருந்து மட்டும் பலர் இதில் கலந்துகொண்டனர். பிங்க் நிற உடையணிந்து அணிவகுத்த இந்திய வீரர்களை கண்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்து வரவேற்றார். அரங்கமும் கரகோசத்தால் நிரம்பியது. இந்த நாடுகளின் கொடியை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றிபெற்று தேர்வு செய்யப்பட்ட 186 மாணவர்கள் ஏந்திச்சென்றனர்.

விக்னேஷ் சிவன்
அண்மையில் வெளியான இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர படத்திற்கான பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய அந்த விளம்பர படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டின் இந்த தொடக்க விழாவையும் இயக்குநர் விக்னேஷ் சிவனே இயக்கி வருகிறார். இதற்காக அவர் வாக்கி டாக்கியுடன் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications