கருணாநிதியின் சினிமா வாழ்க்கை! விஜய் இயக்கும் டாக்குமெண்டரி ஃபிலிம்! ஜன.6ல் சென்னையில் திரையிடல்!
கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு, டிவி நெடுந்தொடர், என எல்லா துறைகளிலும் தனது அளப்பறிய பங்களிப்பை செலுத்தியவர் கருணாநிதி. ராஜகுமார், மந்திரகுமாரி, மருதநாட்டு இளவரசி, பராசக்தி என இன்னும் எண்ணற்ற திரைப்படங்களில் அனல் பறக்கும் வசனங்களை இடம்பெறச் செய்து கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் திகழ்ந்தார்.

அரசியல், இலக்கியம், விளையாட்டு, சினிமா என எல்லா துறைகளிலும் ஆல் ரவுண்டராக விளங்கிய கருணாநிதி. இந்நிலையில் அவரது நூற்றாண்டு விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி கொண்டாடப்பட்டும் வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஜூன் 3 2023 முதல் ஜூன் 3 2024 வரை ஓராண்டு முழுவதும் நான் ஸ்டாப் கொண்டாட்டமாக கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட முடிவெடுக்கப்பட்டு வரும் ஜனவரி 6ஆம் தேதி சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதற்கான பணிகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் கருணாநிதியின் சினிமா வாழ்க்கையை ஆவணப் படமாக இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். இவர் ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் இயக்கி வரும் கருணாநிதின் திரை வாழ்க்கை குறித்த ஆவணப்படம் வரும் ஜனவரி 6ஆம் தேதி வெளியிடப்பட்டு திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications