மாற்றத்தை விரும்புகிறீர்களா.. அப்ப கமலுக்கு ஆதரவு தெரிவியுங்கள் தலைவா.. பிரபல இயக்குநர் கோரிக்கை
சென்னை: மாற்றத்தை விரும்பினால் கமலுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என ரஜினிகாந்திற்கு இயக்குநர் விஜய் மில்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதனிடையே உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கட்சி தொடங்கும் எண்ணத்தை கைவிட்டார்.
இந்த நேரத்திலும் கூட தன்னை பற்றி கவலைப்படாமல் தன்னுடன் பிரச்சாரத்திற்கு வரும் 4 பேருக்கு கொரோனா பரவினால் என்ன செய்வது என யோசித்து கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டுவிட்டார்.

வேண்டுகோள்
இது ரசிகர்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் விஜய் மில்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் தைரியமான முடிவு. உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள்.

ஆதரவு
உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதி மய்யத்துக்கு அறிவியுங்கள்" என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் ரஜினி முடிவு குறித்து கூறுகையில், "என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். அவர் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.

ரஜினியிடம் கமல் ஆதரவு
சென்னை சென்று ரஜினியை சந்தித்து விட்டு உங்களிடம் பேசுகிறேன்" என்று கூறியிருக்கிறார். அனேகமாக சென்னையில் ரஜினியை சந்தித்துவிட்டு ஆதரவு கேட்பார் என்றே தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினியை சந்தித்து கமல்ஹாசன் ஆதரவு தரும்படி கேட்டார்.

ஒரு நல்ல கட்சி
ஆனால் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவு தரவில்லை. அரசியலுக்கு வராவிட்டாலும் ஏதாவது ஒரு நல்ல கட்சிக்கு ரஜினி ஆதரவு தர வேண்டும் என அவருக்கு நெருக்கமானவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே ரஜினி எந்த கட்சிக்கு ஆதரவு தருவார் என தெரியவில்லை. நண்பர் கமலுக்கு ஆதரவு தருவாரா இல்லை நெருக்கமானவர்கள் சொல்லும் கட்சிக்கு ஆதரவு தருவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications