டிஸ்கோ சாந்தியை அந்த கோலத்தில் பார்த்து பதறிய ரசிகர்கள்! மூக்கில் ட்யூப், என்னாச்சு மேடம் உங்களுக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஸ்கோ சாந்தியை அந்த கோலத்தில் பார்த்ததுமே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.. திடீரென ஒரு போட்டோவை போஸ்ட் செய்திருந்தார் டிஸ்கோ சாந்தி. அந்த போட்டோவில் அவர் ஆஸ்பத்திரி டிரஸ்ஸுடன், மூக்கில் ஆக்சிஜன் டியூப்புடன் காணப்பட்டார்.. உடனே ரசிகர்கள் என்ன ஆச்சு மேடம் உங்களுக்கு? என்று பதறிப்போய் விசாரிக்க துவங்கி விட்டனர்.

டிஸ்கோ சாந்தி 1980-களில் தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக இருந்தவர்... தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஒடியா உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து, ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர்..

Disco Shanthi

டிஸ்கோ சாந்தி

இவரது அப்பா நடிகர் C.L. ஆனந்தன் அந்தக்கால கதாநாயகன்.. வீரத்திருமகன், விஜயபுரி வீரன் உட்பட பல பிரபலமான படங்களின் ஹீரோ.. எம்ஜிஆர் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர்.. விஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே, அந்த ஒரு நிமிடம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவரது தங்கை லலிதா குமாரி, நடிகர் பிரகாஷ் ராஜை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். டிஸ்கோ சாந்தியின் கணவர் ஸ்ரீஹரி, தெலுங்கு பட ஹீரோவாக நடித்தவர்..

இப்படிப்பட்ட கலைக்குடும்பத்தை சேர்ந்தவரான டிஸ்கோ சாந்தி, திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.. கடந்த 2013ம் ஆண்டு கணவர் ஸ்ரீஹரி மாரடைப்பால் மரணடைந்து விடவும், கணவரின் பிரிவை தாங்க முடியாமல் பல வருட காலம் மனவேதனையில் தவித்து வந்தார்.. இப்போதுதான் மெல்ல மெல்ல அந்த சோகத்திலிருந்து விடுபட்டு, கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு, ராகவா லாரன்ஸின் தம்பி நடிக்கும் புல்லா என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

மூக்கில் டியூப்

இப்படிப்பட்ட சூழலில், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ ஒன்றை திடீரென சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருந்தார் டிஸ்கோ சாந்தி.

61 வயதான நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனை உடை அணிந்திருந்தார்.. மூக்கில் nasal cannula எனப்படும் ஆக்சிஜன் குழாயும் பொருத்தப்பட்டிருந்தது.. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவருடைய உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கி விட்டார்கள்.. ஆனால் டிஸ்கோ சாந்தி தனக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது, எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், எத்தனை நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றார் என்பது போன்ற எந்த விவரத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார்

அதற்கு பதிலாக, இப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்கு திரும்பி விட்டார் போலும். இதை குறிப்பிடும் வகையில் "Back home" என்று மீண்டும் பதிவிட்டுள்ளார். இதனால், அவர் வீட்டுக்கு திரும்பிவிட்டது ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்றுதான் தெரியவில்லை..

டிஸ்கோ சாந்தியின் மருத்துவமனை சிகிச்சை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் டிஸ்கோ சாந்தியின் பதிவின் கீழ் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து, அக்கறையுடன் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..

உங்களுக்கு என்ன ஆச்சு மேடம்? உடம்பை பார்த்துக்கோங்க என்றும், விரைவில் நீங்கள் முழுமையாக குணமடைய வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

வீட்டிலேயே நர்ஸ்

இதனிடையே, ஒரு பிரபல சேனலுக்கு டிஸ்கோ சாந்தி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "சென்னைக்கு வந்திருந்தபோது, என்னை வைரஸ் காய்ச்சல் பாதித்து விட்டது.. உடம்பு வலி, நல்ல காய்ச்சல்.. உடனே ஐசியூவில் அட்மிட் ஆகி ட்ரீட்மென்ட் எடுத்தேன்..

ஆனால், என்னுடைய 2 மகன்களும் இன்றே லண்டன் செல்வதால், டாக்டரிடம் கெஞ்சி கூத்தாடி வீட்டுக்கு வந்துவிட்டேன். வீட்டிலேயே ஆஸ்பிட்டல் செட்டப் உள்ளது.. நர்ஸும் இருக்கிறார்.. இப்போது என் உடல்நிலை பரவாயில்லை.. அனைவரும் உடம்பை ஜாக்கிரதையாக கவனித்து கொள்ளுங்கள்.. என் போட்டோவை பார்த்து ஆறுதலும் வாழ்த்தும் சொன்ன நல்லுள்ளங்களுக்கு என்னுடைய நன்றி" என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+