அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் பேச தடை?
சென்னை: அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து பேச செயற்குழு கூட்டத்தில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதை அடுத்து அக்கட்சியினுள் முதல்வர் வேட்பாளர் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருப்பது தெரியவந்தது. அதே வேளையில் அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக சிலர் ஈடுபட்டு வருவதும் தெரியவருகிறது.

இந்த நிலையில் சசிகலா சிறைத் தண்டனை முடிந்து வெளியானால் அவர் அதிமுகவில் இணைந்து பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் அந்த பேச்சுக்கே இடம் இல்லை என அதிமுக முக்கிய நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பது தெரிகிறது.
இந்த நிலையில் அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்தும் சில நிர்வாகிகளுக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே இதுகுறித்து யாரேனும் பிரச்சினையை கிளப்பக் கூடும் என்பதால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பேச செயற்குழு கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications