யார்கிட்டயும் கைநீட்டி காசு வாங்கல..காவல்துறையிலேயே எனக்கு ஏகப்பட்ட எதிரிகள்! திலீபன் திடீர் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் திலீபன் தற்போது முழுமையாக பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், காவல்துறையில் எனக்கு எந்தச் சம்பளமும் வழங்கவில்லை, காவல்துறையால் பகையை மட்டுமே வளர்த்துக் கொண்டேன் என கூறியிருக்கிறார் முன்னாள் ஆய்வாளர் திலீபன்.

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய போது ஆய்வாளர் திலீபன், அங்கு பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பித் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது.

Police Harassment WhatsApp

மேலும், அந்தப் பெண் காவலரின் பணியிட மாற்றம் தொடர்பாகவும், இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகப் பெண் காவலரின் கணவர் காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வாளர் திலீபனிடம் கேள்வி எழுப்பியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக ஆய்வாளர் மிரட்டியதாகவும் புகார் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பெண் காவலர் அளித்த புகார் தொடர்பாகத் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவின்பேரில் ஆய்வாளர் திலீபன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விளக்கமும் அளித்திருந்தார். இந்த நிலையில், ஆய்வாளர் திலீபன் தொடர்பான மற்றொரு துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கையாக தற்போது அவர் பணியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியபோது, சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் அயற்பணியில் இருந்துள்ளார். அப்போது எவ்வித முன் அனுமதியோ அல்லது தகவலோ தெரிவிக்காமல் தொடர்ந்து 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்ததாகத் துறைரீதியான விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் குழுவின் முன்பு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட ஒழுங்கீனச் செயல்களுக்காக திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ஆய்வாளர் எஸ்.என். திலீபனைப் பணியிலிருந்து நீக்கம் செய்யும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறையில் எனக்கு எந்தச் சம்பளமும் வழங்கவில்லை.. காவல்துறையால் பகையை மட்டுமே வளர்த்துக் கொண்டேன் என காவல் ஆய்வாளர் திலீபன் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அவர்," ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரிடமும் பகையை மட்டுமே சம்பாதித்து வைத்துள்ளேன். காவல்துறையில் தனக்கு உரிய ஆதரவும் உதவியும் கிடைக்கவில்லை. ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதி மக்கள் தனக்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மாற்றுச் சமூக மக்களின் ஆதரவுக்கு நன்றி.

காவல் பணியில் இருந்து விலகுவது குறித்து தானே முடிவெடுத்துள்ளேன். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் தொடர்பான அடையாளங்களை நீக்கினேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் வழக்கில் மொத்தம் 12 சாட்சிகள் உள்ளனர். அதில் 9 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. இந்த விவகாரத்திற்கும் தனது விடுப்பு தொடர்பான சர்ச்சைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

முதல் இரண்டு குழந்தைகளின் உயிரிழப்பின் போது மருத்துவச் செலவுகளுக்காக நீண்ட காலம் சம்பளமில்லா விடுப்பில் இருந்தேன். பின்னர் மூன்றாவது குழந்தையின் மருத்துவச் செலவிற்காக சுமார் 20 லட்சம் ரூபாய் செலவிட்டேன். எனது தந்தைக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக சொத்துகள் மற்றும் காரை விற்று மருத்துவச் செலவுகளை மேற்கொண்டேன். அப்போதும் யாரிடமும் பணம் பெறவில்லை.

கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலுக்கு எதிராகத் தனிப்படை நடவடிக்கைகள் மேற்கொண்டு, 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான கனிமவளங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்ததுடன், 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாகவே காவல்துறையினருடன் தனக்கு பகை ஏற்பட்டது. 2025-ஆம் ஆண்டு விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோதும் பிரச்சனைகள் ஏற்பட்டது.

காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்ற பின்னரும் மூன்று மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. தன் மீதான புகார் தொடர்பான வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. பொதுமக்களின் நலனுக்காகவே காவல்துறையில் பணியாற்றினே. ஆறுமுகநேரி பொதுமக்களுக்கு நன்றி. அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொதுமக்களே முடிவு செய்ய வேண்டும்" என்றும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் முன்னாள் காவல் ஆய்வாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+