சென்னையில் தீயாய் பரவும் கொரோனா - ஒரே நாளில் 5473 பேருக்கு தொற்று உறுதி
தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 5473 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 42 பேர் சென்னையில் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் ஒரே நாளில் 5473பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 5327 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 31222 பேர் சென்னை மாநகரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 42 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு தற்போது பல்கி பெருகி வருகிறது. இந்த நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
மாவட்ட அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இன்றைய தினம் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 5473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை
தமிழக தலைநகர் சென்னை கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறி வருகிறது. தினசரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று ஒரே நாளில் 5327 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சென்னை இன்று ஒரே நாளில் 42 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதன் மூலம் சென்னையில் 4,743 பேர் இதுவரை பலியாகிவிட்டனர்.

கோவை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 1113 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மதுரையில் 691 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 547 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. திருப்பூரில் 423 பேரும், திருச்சியில் 450 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினசரியும் அதிகரிப்பு
காஞ்சிபுரத்தில் 445 பேருக்கும்,திருவள்ளூரில் 905பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தூத்துக்குடியில் 579 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியானது. திருநெல்வேலியில் 644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

200 பேருக்கு மேல் பாதிப்பு
அரியலூரில் இன்று ஒரே நாளில் 73 பேருக்கும் கடலூரில் 292 பேருக்கும் தருமபுரியில் 242 பேருக்கும், திண்டுக்கல்லில் 294 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் 211 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications