கவனித்தீர்களா சுகாதாரத்துறை புள்ளி விவரத்தை.. ஷாக் தரும் தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, காஞ்சிபுரம் உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது.

district wise abstract of covid 19 positive cases report of july 6

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டிருந்தது. .இந்த பட்டியலின்படி சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 1747 பேர் பாதிக்கப்பட்டனர் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 245 பேருக்கும், செங்கல்பட்டில் 213 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 182 பேருக்கும், திருவள்ளூரில் 176 பேருக்கும், தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது..

தேனியில் நேற்று 117 பேருக்கும் தூத்துக்குடியில் 108 பேருக்கும், திருநெல்வேலியில் 84 பேருக்கும், விருதுநகரில் 84 பேருக்கும், கன்னியாகுமரியில் 77 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவையில் 60 பேருக்கும், கடலூரில் 20 பேருக்கும், ஈரோட்டில் 40 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 41 பேருக்கும் தொற்று அதிகரித்துள்ளது.

district wise abstract of covid 19 positive cases report of july 6

தென்காசியில் 46 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 29 பேருக்கும், நீலகிரியில் 26 பேருக்கும், புதுக்கோட்டையில் 25 பேருக்கும், ராமநாதபுரத்தில் 69 பேருக்கும், ராணிப்பேட்டையில் 45 பேருக்கும், சேலத்தில் 39 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. மதுரை, தேனி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+