13 மாவட்டங்களில் சூப்பர் மாற்றம்.. 5 மாவட்டங்களில் மோசமான நிலை.. மாவட்ட கொரோனா நிலவரம்
சென்னை: தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பதை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று அரியலூர், நீலகிரி, நாமக்கல், பெரம்பலூர், உள்பட 13 மாவட்டங்களில் 100க்கும் குறைவான நபர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற 24 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 397 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும் திருவள்ளூரில் 396 பேருக்கும், தேனியில் 360 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 250 பேர்
கோவையில் 217 பேருக்கும், தூத்துக்குடியில் 250 பேருக்கும், விருதுநகரில் 193 பேருக்கும் வேலூரில் 149 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 127 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 131 பேருக்கும், கடலூரில் 146 பேருக்கும், தென்காசியில் 173 பேருக்கும், மதுரையில் 107 பேருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 163 பேர்
திருவண்ணாமலையில் 221 பேருக்கும், புதுக்கோட்டையில் 139 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், தஞ்சாவூரில் 155 பேருக்கும், திருச்சியில் 96 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் 60 பேருக்கும், சிவகங்கையில் 50 பேருக்கும், விழுப்புரத்தில் 67 பேருக்கும், திருப்பத்தூரில் 58 பேருக்கும், திருப்பூரில் 42 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் அதிகம்
தமிழகத்தில் தற்போதைய நிலையில் மிக அதிகபட்மாக சென்னையில் 11,654 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவள்ளூரில் 3513 பேரும், தேனியில் 3014 பேரும், செங்கல்பட்டில் 2728 பேரும், காஞ்சிபுரத்தில் 2718 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் இதுவரை 2302 பேரும் செங்கல்பட்டில் 307 பேரும், மதுரையில் 288 பேரும், திருவள்ளூரில் 286 பேரும் , கோவையில் 125 பேரும், காஞ்சிபுரத்தில் 151 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்

மாவட்ட கொரோனா நிலவரம்
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது பார்ப்போம். அடைப்புக்குறிக்குள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
- அரியலூர்: 46 (1291)
- செங்கல்பட்டு 397 (17811)
- சென்னை 989 (109117)
- கோவை 217 (6670)
- கடலூர் 146 (4774)
- தர்மபுரி 28 ( 880)
- திண்டுக்கல் 131 (3878)
- ஈரோடு 65 (1064)
- கள்ளக்குறிச்சி 86 (4480)
- காஞ்சிபுரம் 393 (11807)
- கன்னியாகுமரி 127 (6348)
- கரூர் 32 (771)
- கிருஷ்ணகிரி ( 1422)
- மதுரை 107 ( 12005)
- நாகப்பட்டினம் 69 ( 1145)
- நாமக்கல் 35 (991)
- நீலகிரி 10 (958)
- பெரம்பலூர் 32 (718)
- புதுக்கோட்டை 139 (3189)
- ராமநாதபுரம் 60 (3646)
- ராணிப்பேட்டை 219(6964)
- சேலம் 163 (4622)
- சிவகங்கை 50 (2936)
- தென்காசி 173 (3132
- தஞ்சாவூர் 155(4089)
- தேனி 360 (7898)
- திருப்பத்தூர் 58 (1605)
- திருவள்ளூர் 396 (17013)
- திருவண்ணாமலை 221 (7832)
- திருவாரூர் 51 ( 1998)
- தூத்துக்குடி 250 (9159)
- திருநெல்வேலி 162 (6578)
- திருப்பூர் 42 (1154)
- திருச்சி 96 (5129)
- வேலூர்149 (73550
- விழுப்புரம் 67 (4530)
- விருதுநகர் 193 (9966)
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications