முதல்முறையாக தருமபுரியில் பாசிட்டிவ்.. அதிர்ச்சி தரும் சென்னை.. ஆறுதல் அளிக்கும் கிருஷ்ணகிரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழதத்தில் முதல்முறையாக தருமபுரியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகப்பட்சமாக சென்னையில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    மூன்றாம் நிலைக்கு நுழைஞ்சுட்டோம்... திருவண்ணாமலை கலெக்டர் உருக்கமான வீடியோ

    தமிழகத்தில் கொரோனாவால் பத்திரிகையாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுகாதாரத் துறை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவதில்லை. கொரோனா தொடர்பான அப்டேட்டுகளை எல்லாம் தற்போது கொரோனாவுக்கான ஸ்பெஷல் வெப்சைட்டில் மீடியா புல்லட்டினில் கொடுக்கிறார்கள்.

    அந்த வகையில் இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆக பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா

    கொரோனா

    தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தோர் மாவட்ட வாரியாக:

    • செங்கல்பட்டு -1
    • சென்னை- 27
    • தருமபுரி- 1
    • திண்டுக்கல்- 3
    • மதுரை- 2
    • நாமக்கல்- 4
    • ராமநாதபுரம்- 1
    • சேலம்- 5
    • தஞ்சை- 1
    • தென்காசி-1
    • நெல்லை- 1
    • திருப்பத்தூர்- 1
    • திருப்பூர்- 1
    • திருவாரூர்- 1
    • விழுப்புரம்- 1
    • விருதுநகர்- 3
     கொரோனா இல்லை

    கொரோனா இல்லை

    தமிழகத்தில் சென்னையில் அதிகபட்சமாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துவிட்டது. அது போல் கோவை, ஈரோடு உள்ளிட்டவை கொரோனா பரப்பும் மையமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று அங்கு புதிதாக யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி

    அது போல் புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில்தான் கொரோனா இல்லாமல் இருந்தது. ஆனால் புதுக்கோட்டையில் நேற்றும் தருமபுரியில் இன்றும் முதல் முறையாக கொரோனா பாதித்தோர் கண்டறியப்பட்டனர். தற்போது தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமே கொரோனா பாதிப்பில்லாமல் உள்ளது.

     எந்த மாவட்டத்தில் எவ்வளவு

    எந்த மாவட்டத்தில் எவ்வளவு

    இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை சேர்த்தால் அரியலூரில் 6 பேர், செங்கல்பட்டில் 57 பேர், சென்னையில் 400 பேர், கோவையில் 134 பேர், கடலூரில் 26 பேர், தருமபுரியில் ஒருவர், திண்டுக்கல்லில் 80 பேர், ஈரோட்டில் 70 பேர், கள்ளக்குறிச்சியில் 5 பேர், காஞ்சிபுரத்தில் 11 பேர், குமரியில் 16 பேர், கரூரில் 42 பேர், மதுரையில் 52 பேர் , நாகப்பட்டினத்தில் 44 பேர், நாமக்கலில் 55 பேர், நீலகரியில் 9 பேர், பெரம்பலூரில் 5 பேர், புதுக்கோட்டையில் ஒருவர், ராமநாதபுரத்தில் 12 பேர், ராணிப்பேட்டையில் 39 பேர், சேலத்தில் 29 பேர், சிவகங்கையில் 12 பேர், தென்காசியில் 32 பேர், தஞ்சையில் 55 பேர், தேனியில் 43 பேர், நெல்லையில் 63 பேர், திருப்பத்தூரில் 18 பேர், திருப்பூரில் 110, திருவள்ளூரில் 50 பேர், திருவண்ணாமலையில் 13 பேர் , திருவாரூரில் 29 பேர், திருச்சியில் 51 பேர், தூத்துக்குடியில் 27 பேர், வேலூரில் 22 பேர், விழுப்புரத்தில் 42 பேர், விருதுநகரில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     அதிகபட்சமாக குணமடைந்த மருத்துவமனை

    அதிகபட்சமாக குணமடைந்த மருத்துவமனை

    இன்று மட்டும் 92 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகப்பட்சமாக ஈரோடு பெருந்துறை மருத்துவமனையில் இருந்து 29 பேர் குணமடைந்தனர். அதாவது அங்கு அனுமதிக்கப்பட்ட அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அது போல் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் 27 பேரும், நெல்லையில் 20 பேரும் அதிகபட்சமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+