தமிழ்நாட்டில் விவசாயத்தை மட்டுமே நம்பாமல் வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வெற்றி பெற்ற மாவட்டங்கள்
சென்னை: தமிழ்நாட்டின் பிரதான தொழிலாக விவசாயம் தான் இருக்கிறது. ஆனால் விவசாயத்தை செய்வோரின் வாழ்வு வளமாக இல்லை.. தமிழ்நாட்டில் சென்னை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட விவசாயத்தை மட்டுமே நம்பாமல் வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வெற்றி பெற்ற மாவட்டங்களை இப்போது பார்ப்போம்..
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்தை சார்ந்து தொழில்களை மக்கள் செய்து வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் உள்பட மற்ற தொழில்கள் உள்ளன. ஒவ்வொரு ஊரில் விவசாயத்தை தாண்டி மக்கள் வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிப்காட்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொழிற் பூங்காக்கள் மூலம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதால் அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

சிறு குறு தொழில் செய்து படித்தவர்கள் சுய தொழில் தொடங்க வேண்டும் என்று மானியத்தில் கடன் உதவி தருகிறது. அதுமட்டுமின்றி சுயதொழில் தொடங்க படித்தால் மட்டும் போதாது என்பதால், தொழிற்பயிற்சிகளை அரசே இலவமாக வழங்கி வருகிறது. எல்லா வகையான தொழில்களுக்கும், தொழிற்கல்வி நிலையங்களை தாண்டி, அரசே சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.. அந்த சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வோருக்கு கடன் உதவியும் வழங்கப்படுகிறது.
இங்கு தேவை என்ன தெரியுமா? எந்த தொழிலை செய்ய வேண்டும்.. அதற்கு என்ன பயிற்சி வேண்டும்.. அதற்கான வளங்கள் எங்கு உள்ளன.. எங்கு என்ன மாதிரியான தொழில்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.. எந்த மாதிரியான மக்கள் வாழ்கிறார்கள். அங்கு என்ன தொழில் செய்தால் பணம் ஈட்ட முடியும் என்பதை அறிய வேண்டியதுதான். அதை அறிந்து அதற்கு தகுந்தாற் போல் முயற்சி செய்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள். முயற்சி செய்ய விரும்பாதவர்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களாக உள்ளனர். சரி விஷயத்திற்கு வருவோம்..
தமிழ்நாட்டில் விவசாயத்தை மட்டுமே நம்பாமல் வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வெற்றி பெற்ற மாவட்டங்களை பற்றி பார்ப்போம்.. தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாத ஒரு மாவட்டம் என்றால் அது சென்னை தான்.. சென்னை தான் தமிழ்நாட்டில் உச்சபட்சமாக வளர்ந்த மாவட்டம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக கோவை அதிகமாக வளர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் விவசாயம் இருக்கிறது. ஆனால் மிக குறைவாகவே இருக்கிறது. கோவையில் பெரும்பாலும் ஜவுளி நிறுவனங்க இருக்கின்றன. அதேபோல் பம்ப், கிரைண்டர், பைப், மோட்டார், சிஎன்சி மெஷின், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் பிரதானமாக உள்ளன. கோவைக்கு அடுத்தபடியாக என்று எதையும் சொல்ல முடியாது. பரவலாக சொல்வது என்றால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், தூத்துக்குடி, விருதுநகர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், கடலூர் போன்ற மாவட்டங்கள் விவசாயத்தை தாண்டி கணிசமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு குறிப்பிட்ட துறையில் புகழ் பெற்று விளங்குகின்றன.
அதேநேரம் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தஞ்சை, திருவாருர், நாகை, விழுப்புரம், தர்மபுரி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளன. வேறு தொழில்கள் பெரிய அளவில் இல்லை.. இங்குள்ள மக்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் நிலையே அதிகமாக உள்ளது.. இங்கு தான் தொழில் வளர்ச்சிகள் அதிகம் தேவைப்படுகிறது. விவசாயத்தை தாண்டி மற்ற தொழில்கள் வளர வேண்டிய பகுதிகளாக இந்த மாவட்டங்கள் இருக்கின்றன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்












Click it and Unblock the Notifications