Ditwah: புயலாகவே சென்னையை நெருங்கும் ”டிட்வா”.. இன்னைக்கும் நாளைக்கும் ஆரஞ்சு அலர்ட்.. அமுதா பேட்டி
சென்னை: வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 350 கி. மீ தூரத்தில் தெற்கு திசையில் மையம் கொண்டுள்ளது. புயலாகவே சென்னையை நெருங்கும் என்றும், 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இதனால் நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழையானது படிப்படியாக குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

110 கி.மீட்டர் தொலைவில் மையம்
தமிழகத்தில் நேற்று தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இன்று டிட்வா புயலால் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
வங்க கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 10 கி.மீட்ட வேகத்தில் நகர்ந்து வருகிறது. வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு 350 கி. மீ தூர்த்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.
சென்னையில் 75 கிமீ வேகத்தில் காற்று
தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரும் டிட்வா புயல் வட தமிழ்நாட்டின் கடலோரத்தை ஒட்டி செல்லும். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று 75 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசலாம்.
சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதிகளில் டிட்வா புயல் நிலவ வாய்ப்பு. கரையைக் கடக்காது. நாளை அதிகாலை முதல் டிசம்பர் 1 ஆம் தேதியில் புயல் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.
நாளைக்கு ரெட் அலர்ட்
மழையை பொறுத்தவரை நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் படிப்படியாக குறையும். நாளை ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் மழை தொடரும்.
சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
இன்று காவிரி படுகை மாவட்டங்களில் 90 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது. நாளை வட தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் 80 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும். சென்னை புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயலாகவே டிட்வா புயல் சென்னையை நெருங்கும். பருவமழை இயல்பை விட 3 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
மழை அளவு செமீ
* கோடியக்கரை (நாகப்பட்டினம்) 25 செமீ.
* வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 19,
* வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 13,
* திருப்பூண்டி (நாகப்பட்டினம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) தலா 12,
* தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 11.
* பாம்பன் (ராமநாதபுரம்), காரைக்கால் (காரைக்கால்) தலா 10.
* தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மண்டபம் (ராமநாதபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), இளையாங்குடி (சிவகங்கை), திருக்குவளை (நாகப்பட்டினம்). தொண்டி (ராமநாதபுரம்) தலா 7,
* தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), சூரங்குடி (தூத்துக்குடி), திருச்செந்தூர் (தூத்துக்குடி) தலா 6,
* வட்டானம் (ராமநாதபுரம்), கடலாடி (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்) தலா 5 செமீ மழை பெய்துள்ளது. என்று அவர் கூறினார்.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications