"மாஸ்டர் பிளான்" திவாகரன்.. சிலதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது.. குஷியில் திமுக.. அதிர்ந்த எடப்பாடி
சென்னை: சசிகலாவின் அரசியல் குறித்து, திவாகரன் முக்கிய கருத்து ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.. இது அதிமுகவை மட்டுமல்லாமல், திமுகவையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
சமீபத்தில், மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் இல்ல திருமணத்தில், விகே சசிகலா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது..
சசிகலா: அந்தவகையில், ஓபிஎஸ்-சசி-தினகரன் சந்திப்பானது, அதிமுக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

சசிகலா கல்யாணத்துக்கு வராதது குறித்து 2 விதமான தகவல்கள் பரவின.. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அதாவது சதைப்பிடிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ளதால், திருமணத்தில் பங்கேற்கவில்லை என்று சொல்லப்பட்டது. மற்றொருபுறம், இதற்கு பின்னால், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் பங்கு இருப்பதாக கூறப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி: அதாவது, எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான போக்கை திவாகரன் கொண்டிருக்கிறாராம்.. இதெல்லாம் தெரிந்தும்கூட, திவாகரனுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் வைத்திலிங்கம்.. அப்படியிருந்தும்கூட, தானும் கலந்து கொள்ளாமல், சசியையும் கலந்து கொள்ள வேண்டாம் என்று தடுத்ததாக சொன்னார்கள்.. அதற்கேற்றவாறு இன்றுவரை, சசிகலா, ஓபிஎஸ்ஸை சந்திக்காமலேயே தவிர்த்தும் வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், திவாகரன் செய்தியாளர்களிடம் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அவர் பேசும்போது, "ஓபிஎஸ் தரப்பு இனிமேல் எடப்பாடி உடன் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்திருந்தாலும், சசிகலாவை பொருத்தவரை அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தான் நினைக்கின்றார்.. எல்லாருமே சேர்ந்தால்தான் அது அதிமுக என்று தெளிவாக சொல்லி உள்ளார்கள்.. அதனால், அனைவரிடமிருந்து இடைவெளி விட்டு அனைத்தையும் கவனித்து வருகிறார்.
ஓபிஎஸ்: அனைவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். அவருடைய முயற்சியும் அதற்காகத்தான் நடந்து வருகிறது. அது விரைவில் வெற்றி பெறும்.
இப்போது இது போன்று பேசுபவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் சுமூகமான முடிவையே எடுப்பார்கள். அதற்கான சூழல்தான் இப்போது வந்து கொண்டிருக்கிறது.. அதுவும் எம்பி தேர்தலுக்கு முன்பாகவே இது நடக்க வாய்ப்பு உள்ளது... சசிகலாவை பொறுத்தவரை ஒருவரை பார்ப்பதற்கு அனுமதி கொடுத்து விட்டு, இன்னொருவரை பார்ப்பதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று இருக்கக்கூடாது என்று நினைத்து, எல்லாரும் கூடி வரட்டும் என்று செயல்படுகிறார்..
செயல்பாடுகள்: சிலவற்றையெல்லாம் வெளியே சொல்ல முடியாது, எல்லாரையும் ஒன்றாக இணைத்து கூட்டி கழித்து, திருமணத்தில் தாலி முடிச்சு போடுவதைப்போல் செயல்படுகிறார். அதிமுக அப்படியே தான் உள்ளது, எங்கேயும் போகாது.
தமிழ்நாடு அரசின் செயல்பாடு நன்றாக சென்று கொண்டுள்ளது. ஆளுநர் விவகாரத்தில் கருத்து சொல்ல முடியாது, ஆனால் சுமூகமாக செல்ல வேண்டும்.. இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கல்வித்துறையில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3 பேட்ச் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. அவர்கள் பட்டம் வாங்காமல் இருக்கிறார்கள்..
காய் நகர்த்தல்: திமுக ஆட்சியில் அனைத்துமே நடந்து கொண்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஆற்றல் மிக்கவராக உள்ளார். அங்கே இங்கே சில பிரச்சனைகள் இருக்கிறது.. ஆனால் அதை பெரிசுபடுத்தி பேசவும் முடியாது. நிர்வாக ரீதியில் ஆங்காங்கே சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும், மற்றபடி இந்த ஆட்சி சரிதான்" என்று கூறியுள்ளார்.
திமுகவுக்கு எதிரான காய்நகர்த்தல்களை டிடிவி தினகரன் தீவிரமாய் மேற்கொண்டு வரும்நிலையில், திவாகரனின் இந்த பேச்சு மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications