Divya Sathyaraj: அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு வழங்கிய திவ்யா சத்யராஜ்! எந்த தொகுதியில் போட்டி?
சென்னை: திமுக சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியுள்ள நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம். திமுகவில் திவ்யா இணைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மமக, ஐயூஎம்எல், மக்கள் நீதி மய்யம், தவாக, கொங்கு மக்கள் தேசிய கட்சி, கொங்கு பேரவை, முக்குலத்தோர் புலி படை, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகின்றன. திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் விருப்பமனு பெறுவது தொடங்கியது. தற்போது இது மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்பமனுக்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை பெற ரூ 1000 கட்டணம் செலுத்த வேண்டும். பொது தொகுதிக்கு ரூ 25 ஆயிரம் , மகளிர் அல்லது தனி தொகுதிகளுக்கு ரூ 15 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா நேரில் வந்து விருப்பமனுவை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் முதல்வர், முற்போக்கு சிந்தனையுள்ள ஒருவராக இருத்தல் வேண்டும்.
அப்படிப்பட்ட தலைவர்தான் நம் முதல்வர்! ஒரு வருஷமாக திமுகவில் இருந்து வருகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் எந்த தொகுதியில் போட்டியிடுவதாக விருப்பமனுவில் குறிப்பிட்டேன் என்பதை இப்போது சொல்ல விருப்பப்படவில்லை.
அதை தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். அனைவரும் மக்களின் வளர்ச்சிக்கு உதவும் கட்சிக்கு வாக்களியுங்கள். திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்தது மகிழ்ச்சியே! அது போல் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. விஜய பிரபாகரன் என் உடன் பிறந்த சகோதரர் போல், அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு திவ்யா தெரிவித்தார்.
திவ்யா சத்யராஜ் அண்மைக்காலமாக விஜய்யை எதிர்த்து பல்வேறு கூட்டங்களில் பேசி வருகிறார். அதிலும் கரூர் சம்பவத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.
திவ்யா சத்யராஜ் நடிகர் சத்யராஜின் மகள். திவ்யா நடிப்பில் ஈடுபடாமல், ஊட்டச்சத்து நிபுணர் (Nutritionist) துறையில் பணியாற்றி வருகிறார். சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் M.Phil. in Nutrition படித்தவர் (2006-இல் முடித்தார்). Suman Clinic போன்ற இடங்களில் Nutrition Consultant-ஆக பணியாற்றியுள்ளார்.
அட்சய பாத்திரம் அறக்கட்டளையின், அதாவது பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின், நல்லெண்ணத் தூதுவராக 2018 முதல் பணியாற்றி வருகிறார். World Vision India போன்ற அமைப்புகளுடன் இணைந்து குழந்தைகள் நலனுக்காக பணியாற்றியுள்ளார். ரெயின்டிராப்ஸ் அமைப்பிலிருந்து பெண் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். சமூக சேவை மற்றும் ஊட்டச்சத்து துறையில் அறியப்பட்டவர்.
2025 ஜனவரி 19-ஆம் தேதி திமுகவில் இணைந்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு முயற்சியால் இது சாத்தியமானது. இணைந்த சில நாட்களிலேயே திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications