Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேப்பரை பார்க்காமல் உங்க கட்சிகாரங்க 10 பேர் சொல்லுங்க.. விஜய்க்கு சவால் விட்ட திவ்யா சத்யராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "விஜய்க்கு ஒரு சவால் விடுகிறேன்.. உங்களால் பேப்பரை பார்த்து படிக்காமல் உங்க கட்சியில் இருக்கிற தொண்டர்கள் பத்து பேரின் பெயரை சொல்ல முடியுமா" என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். கரூரில் 41 பேர் இறந்துவிட்டார்கள்.. சேலத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.. இதற்கு எல்லாம் நீங்க தான் பொறுப்பு. ஆனால் இதற்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்லவே இல்லை" எனவும் விமர்சித்து பேசியிருந்தார்.

நடிகர் சத்யராஜின் மகளும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ் விஜய்யின் தவெகவை ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்து வந்தார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திலும் விஜய் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

Divya Sathyaraj

டான்ஸ் ஆடுகின்றவர் தலைவர் கிடையாது

மேலும் திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் எல்லாம் தலைவர் கிடையாது.. தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர்.. எவன் செத்தால் எனக்கு என்ன என்று படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மேடம் போல.. ஆபீஸ் ரூமில் இருந்துகொண்டு லாஜிக்கே இல்லாமல் ஸ்லோமோஷன் ல பேசுகின்றவர் தலைவர் கிடையாது எனவும் விமர்சனம் செய்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சென்னை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 500 பள்ளி, கல்லூரி மாணவி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திவ்யா சத்யராஜ் விஜய்க்கு சவால் விடுத்து பேசினார். திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-

கரூர், சேலம் உயிரிழப்பு

கரூரில் 41 பேர் இறந்துவிட்டார்கள்.. சேலத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். திண்டுக்கல்லில் யாரோ உயிரிழந்துவிட்டார். இதற்கு எல்லாம் நீங்க தான் பொறுப்பு. ஆனால் இதற்கு எல்லாம் நீங்கள் பதில் சொல்லவே இல்லை. சமீபத்தில் விஜய்யின் பேச்சை கேட்டேன்.

அப்போது அவர் சொல்கிறார்.. மக்களுக்கு என்ன பண்ணனும் என்பதை தேர்தல் அறிக்கையை பார்த்துவிட்டு சொல்கிறேன் என பேசுகிறார். நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். எனக்கு இன்னைக்கு கொஞ்சம் த்ரோட் பெயின்.. டாக்டரிடம் போறோம். அப்போ அவர் உனக்கு என்ன ஊசி போட வேண்டும் என்பதை டெக்ஸ்ட் புக்கை பார்த்துவிட்டு வந்து போடுகிறேன் என சொன்னால் நான் அந்த கிளினிக்கை விட்டே ஓடிப்போயிடுவேன்.

உங்களுக்கு ஒரு சேலஞ்ச்!

ஏனென்றால் அந்த டாக்டருக்கு என்ன ஊசி போட வேண்டும் என்றே தெரியவில்லை. அதே மாதிரி மக்களுக்கு என்ன பண்ணனும் என்ற புரிதலே இல்லை என்றால் எப்படி உங்களை நம்பி மக்கள் ஓட்டு போடுவாங்க என்று நம்புகிறீங்க.. உங்கள் கட்சியிலேயே பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. இதனை தூத்துக்குடி நிர்வாகி அஜிதாவிடம் நடந்து கொண்டதை பார்க்கும் போதே தெரிந்தது.

டிவிகே தொண்டர்கள் உங்களுக்கு ஒரு சின்ன சேலஞ்ச்.. உங்களால் முடிந்தால் ஒரு மூன்று நாளைக்குள் விஜய் சாரோடு ஒரு புகைப்படம் எடுத்து அதனை என் இன்ஸ்டாகிராமுக்கு அனுப்புங்கள் பார்ப்போம். விஜய் சாருக்கு ஒரு சின்ன சேலஞ்ச்.. பேப்பரை பார்க்காமல், உங்க கட்சியில் இருக்கிற ஒரு 10 தொண்டர்களின் பெயரை சொல்ல முடியுமா? நீங்க இந்த கட்சியோட தலைவர் என்றால் சொல்லுங்கள்.. என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+