Chennai Mayor: சென்னை மேயராகிறாரா திவ்யா சத்யராஜ்? உள்ளாட்சி தேர்தல் எப்போது?
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், வரும் 2027 ஆம் ஆண்டு சென்னை மேயராக போகிறாரா என எல்லோரும் கேட்டு வரும் கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நடிகர், நடிகைகளின் மகனோ மகளோ அதே திரைத்துறைக்கு வருவதுதான் இயல்பு. டாக்டர் புள்ள டாக்டர், வக்கீல் புள்ள வக்கீல் என்ற கணக்குதான். ஆனால் ஒரு சிலரே அந்த சினிமா வாடை இல்லாமல் வேறு தொழிலில் ஜொலிக்கிறார்கள்.
அந்த வகையில் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் குறித்து சொல்லலாம். சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு ஏனோ ஒரு திருப்புமுனை இந்த திரைப்படத் துறையில் அமையவில்லை.
திவ்யா சத்யராஜ்
ஆனால் திவ்யா சத்யராஜோ திரைத்துறைக்குள் நுழையாமல் மருத்துவராகிவிட்டார். அதாவது ஊட்டச்சத்து நிபுணர். இவர் மகிழ்மதி எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை கொடுத்து வருகிறார்.
சமூகம் சார்ந்த பிரச்சினை
அவ்வப்போது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது அரசியலுக்கும் வந்துவிட்டார். திமுகவில் இணைந்துள்ளார். தந்தை சத்யராஜ், பெரியாரிய கொள்கைகளை கடைபிடித்து வருகிறார். மகள் திராவிட கட்சியில் இணைந்துள்ளார்.
அரசியல் பேட்டி
இந்த நிலையில் அவர் அரசியல் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு அரசியல்வாதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திமுக பெண்களை மதிக்கும் கட்சி. நான் அடுத்த சென்னை மேயராகப் போகிறேனா என நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள்.
தன்னலமின்றி உழைப்பேன்
நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன். ஒரு பொது ஊழியராக இருப்பதற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவளாக உணர்கிறேன் என திவ்யா தெரிவித்துள்ளார்.
தவெக விஜய்
திவ்யா சத்யராஜ், தவெக விஜய்க்கு எதிரான அரசியலை முன்னெடுத்து வருகிறார். திமுக நிகழ்ச்சியில் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிகழ்வில் திவ்யா பேசுகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏசி கேரவனில் சொகுசு விமானத்தில் நண்பர்களின் திருமணத்திற்கு செல்லும் போலி அரசியல்வாதி அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யா அஜித்தா
இந்த நிலையில் அவர் அண்மையில் ஒரு இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவருக்கு விஜய் பிடிக்குமா, அஜித் பிடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
அஜித் பிடிக்கும்
அவர் கூறுகையில், நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். மிக முக்கியமாக அவர் பெண்களை மதிக்கிறார். அவர் ஒரு குடும்பத் தலைவர், தனது வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை போற்றி பின்பற்றுகிறார்கள்.
அஜித் ஏன்
அஜித் ரசிகர்கள் யாரும் சமூகஊடகங்களில் பெண்களை அவமதிப்பதில்லை. அவர்கள் கோழைகளும் அல்ல. கண்ணியத்துடனும் தரத்துடனும் நடந்து கொள்கிறார்கள். அஜித், தனது ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சுறுத்தவோ அல்லது அவமதிக்கவோ அனுமதிக்கவே மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
மேயர் பிரியா
சென்னை மேயராக ஆர்.பிரியா உள்ளார். இவர் மிகவும் இளம் வயது மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டார். பிரியாவின் தந்தையும் திமுகவின் விசுவாசியாவார். கடந்த முறை 2022 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 5 ஆண்டுகள் பதவிக்காலம் என்றால் 2027 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications