மிஸ்டர் எச்.ராஜா ஒரு கண்ணியமில்லாத அரசியல்வாதி! திவ்யா சத்யராஜ் கடும் விமர்சனம்!
சென்னை: பெரியார் விவகாரத்தில் தனது தந்தை சத்யராஜை விமர்சித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை கண்ணியமில்லாத அரசியல்வாதி என டாக்டர் திவ்யா சத்யராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசுக்கு எதிராக கருத்து சொன்ன அண்ணாமலையையும் இவர் ஏற்கெனவே விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து சத்யராஜின் மகள் திவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: மரியாதைக்குரிய எச் ராஜா அவர்களே, நீங்கள் பேசிய பேச்சை இப்போதுதான் கேட்டேன். நான் தீர்க்கமாக நம்புகிறேன், நீங்கள் நேர்மை, ஒழுக்கம், கண்ணியம் இல்லாத அரசியல்வாதி!உங்கள் பேச்சில் எந்தவித அர்த்தமும் இல்லை. முட்டாள்தனமான கருத்தை கூறியிருக்கிறீர்கள் என திவ்யா சத்யராஜ் கூறியதுடன் தன்னை தமிழ் மகள் என்றும் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சிகளும் பெரியார் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
அந்த வகையில் பெரியாரிய கொள்கையை பின்பற்றி வரும் சத்யராஜ், தனது வீடியோவில் தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலின் அடிநாதமான சமூகநீதி கோட்பாட்டை பொது மேடைகளில் சொல்லி உண்மையான விளக்கத்தை கூறி, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றி காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்று புதிதாக பேசுபவர்களை பார்த்து கோபம் கூட வரவில்லை. பரிதாபமாக இருக்கு.. 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசுகிறார்கள். ஒரே ஆள் பேச முடியாது என்பதால் புது முகங்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த முது முகங்களை பார்த்து பரிதாபம் தான் படமுடியும். சமூகநீதி கோட்பாட்டையும், திராவிட கருத்தியலையும் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக் கொண்டுவிட்டன.
காங்கிரஸ், கம்யூனிட்ஸ்ட் போன்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலேயே பேசி இருக்கிறார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பெரியாருக்கு மிகப்பெரிய விழாவை மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தி இருக்கிறார். திராவிடம் என்ற பெயரை கட்சியின் பெயரிலேயே வைத்திருப்பவர்கள் பெரியாரை ஆதரிப்பாளர்கள்.
திக, திமுக, மதிமுக, தபெதிக, திராவிட விடுதலை கழகம், அதிமுக, தேமுதிக என்று இத்தனை கட்சிகளின் பெயர்களிலேயே திராவிடம் உள்ளது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தங்களின் கொள்கை வழிகாட்டி பெரியார் என்று கூறியிருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் மிகச்சிறந்த கண்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திராவிட கருத்தியலை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார். தம்பி விஜய் தவெகவின் கொள்கை தலைவராக பிரகடனபடுத்தி இருக்கிறார். இவ்வளவு பேர் பெரியாரை ஏற்ற பின் திராவிட கருத்தியலுக்கு எதிராக பேசுபவர்களை பார்த்தால், அவர்கள் மீது பரிதாபம் தான் வருகிறது. புலம்பும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், நடிகர் சத்யராஜ் திராவிடர் கழகம் குறித்து பேசுவார். பெரியார் படத்தில் நடிப்பார். மகனுக்கு கல்யாணத்தை சனாதன முறைப்படி கோயிலில் நடத்துவார். வெட்கமாக இல்லையா, சத்யராஜ் ஒரு மோசடி பேர்வழி என எச். ராஜா, கடுமையாக விமர்சித்துள்ளதற்கு , திவ்யா கடும் பதிலடியை கொடுத்துள்ளார்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications