Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’ஒரிஜினல்’ மாதம்பட்டி ரங்கராஜின் ப்ளான்.. மேயர் எல்லாம் டார்கெட் இல்லை.. வானதிக்கு போட்டியாக திவ்யா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் திடீரென இணைந்தது சினிமா துறையிலும் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவையில் பிரபல கட்சி ஒன்றின் எம்எல்ஏவுக்கு எதிராகவே அவர் களமிறங்கி இருப்பதாக கூறுகின்றனர். மேலும் சென்னை, கோவை மேயர் பதவிகளின் மீதும் திவ்யா சத்யராஜுக்கு விருப்பம் உள்ளதாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.

கோவை மாவட்டம் மாதம்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் தனது பெயரை சத்யராஜ் என மாற்றிக்கொண்டு தமிழ் திரை உலகில் வில்லனாக அறிமுகமாகி தொடர்ந்து நாயகனாகவும், தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

divya sathyaraj sathyaraj vanathi srinivasan

எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்த போதும் பெரியார் கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். நடிகராக மட்டுமல்லாமல் வில்லாதி வில்லன் திரைப்படத்தை இயக்கியும் நடித்திருக்கிறார். மேலும் தனது மகன் நடித்த லீ உள்ளிட்ட திரைப்படங்களையும் தாயாரித்து இருக்கிறார்.

தமிழக பிரச்சினைகளிலும் இலங்கை தமிழர் பிரச்சினைகளிலும் களத்தில் இறங்கி போராடக் கூடியவர். சத்யராஜ் ஆரம்பத்தில் ரஜினி கமல் உள்ளிட்டோருக்கு வில்லனாக நடித்து, தொடர்ந்து கடலோர கவிதைகள் படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து வேதம் புதிது, வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை, வில்லாதி வில்லன் , 100வது நாள், அண்ணா நகர் முதல் தெரு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நாயகனாக உயர்ந்தார்.

மேலும் பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களில் தனது கனமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றவர். சத்யராஜ் மட்டுமல்லாது அவரது மகன் சிபிராஜும் சினிமா துறையில் தான் இருக்கிறார். ஆனால் அவரது மகள் சினிமா வாசனை இன்றியே வளர்ந்தவர். தனது தாயாரின் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் மேலும் ஊட்டச்சத்து நிபுணராகவும் இருக்கிறார் திவ்யா சத்யராஜ்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வந்த அவர் திடீரென திமுகவில் இணைந்தது பேசு பொருளானது. திமுகவின் கொள்கைகள் தனக்கு பிடித்துப் போனதால் அந்த கட்சியில் இணைந்ததாக கூறினார். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் பிடித்திருந்தால் திமுகவில் இணைந்திருக்கிறார் என கூறுகின்றனர்.

அரசியலில் அவருக்கு பல கனவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக திமுக தலைமையிடம் சீட்டு கேட்கவில்லை, என்றாலும் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக தனது சொந்த ஊரான கோவையில் போட்டியிட விரும்புகிறார் திவ்யா சத்யராஜ். ஏற்கனவே மகிழ்மதி இயக்கத்தின் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகளை அப்பகுதியில் செய்து வருகிறார்.

குறிப்பாக கொரோனா காலத்தில் அப்பகுதியில் பின்தங்கிய மக்களுக்கு இலவச ஊட்டச்சத்து முகாம் உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கிறார். இந்நிலையில், சென்னை மேயர் பதவிக்கு திவ்யா சத்யராஜ் காய் நகர்த்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால் கோவை சட்டமன்றத் தொகுதியில் வானதி சீனிவாசனை எதிர்த்து களமிறங்கவே திவ்யா சத்யராஜ் விருப்பப்படுகிறார்.

மேலும் தனது சொந்த ஊரில் தனது மகள் அரசியலில் கால் பதிக்க வேண்டும் என சத்யராஜும் திட்டமிட்டு வருகிறார். மேலும் இது தொடர்பாக திமுக தலைமையிடம் பேசி திவ்யா சத்யராஜை கோயம்புத்தூரில் வானதி சீனிவாசனுக்கு எதிராகவே களமிறக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் உடன்பிறப்புகள். சரி இதில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு என்ன வேலை எனக் கேட்கிறீர்களா?

நடிகர் சத்யராஜின் உண்மையான பெயர் ரங்கராஜ், அவரது சொந்த ஊர் கோவை அருகே உள்ள மாதம்பட்டி என்பதும், சினிமாவுக்காக அவரது பெயரை சத்யராஜ் என மாற்றிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+