சசிகலா தலைமையிலான அதிமுகவில் திவாகரன்! லிஸ்டில் மிஸ்ஸிங்! இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு புது அணுகுண்டு
சென்னை: சசிகலாவுடன் அவரது சகோதரர் திவாகரன் இணைந்து செயல்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலாவின் தம்பி திவாகரன். இவர் மன்னார்குடியில் உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்த போது மறைந்த முதல்வரின் பெயரை சொல்லி ராஜ்ஜியம் நடத்தியவர்களில் திவாகரனும் ஒருவர். சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் அவரது குடும்பத்தை பெரும்பாலானோர் மன்னார்குடி மாஃபியா என்றே அழைத்தனர்.
இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கும் திவாகரனுக்கும் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனிக் கட்சியை அறிவித்தார்.

மன்னார்குடி
மன்னார்குடியில் அம்மா அணி செயல்படுவதாக கூறி கட்சி அலுவலகத்தை சசிகலாவின் படத்துடன் திவாகரன் திறந்தார். இதற்கு சசிகலா புகைப்படத்தை பயன்படுத்த டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தது தெரியவந்தது. இதையடுத்து திவாகரன் கடந்த 2018ஆம் ஆண்டு சசிகலா இனி எனது சகோதரி அல்ல, முன்னாள் சகோதரி. சசிகலாவின் பெயரை பயன்படுத்தக் கூடாது என தினகரன் கூறியுள்ளார்.

நோட்டீஸ்
இதை சசிகலாவும் ஆமோதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதனால் எங்களது அரசியல் பயணம் நின்று விடாது. என்னை வைத்து சசிகலாவை பழிவாங்க தினகரன் நினைக்கிறார் என்றெல்லாம் திவாகரன் குற்றம்சாட்டினார். இதையடுத்து சசிகலா கடந்த ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆக இருந்த நேரத்தில் அவருககு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சகோதரிக்கு சிகிச்சை
இதையடுத்து தனது சகோதரிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என திவாகரன் குரல் கொடுத்தார். மேலும் சசிகலா விடுதலையானதும் திவாகரன் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டார். இந்த நிலையில் சசிகலாவை விட்டு தினகரன் விலக தொடங்கினார்.

அதிமுகவுடன் இணையும் திவாகரன்
அதிமுகவை கைப்பற்ற சசிகலா தீவிர முயற்சி மேற்கொள்கிறார். இந்த நிலையில் திவாகரன் சசிகலாவுடன் கைகோர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவில் இணைக்கிறார. தஞ்சையில் நாளை மறுதினம் நடக்கும் விழாவில் காலை 11 மணிக்கு இரு கட்சிகளும் இணைகின்றன.

சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை
சசிகலாவுக்கே அதிமுகவில் இடம் இல்லை என சொல்லிவிட்டாச்சு, ஏற்கெனவே அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது சசிகலா தலைமையிலான அதிமுகவில் திவாகரன் தனது கட்சியை இணைப்பதாக கூறியுள்ளார். இதை பார்த்து அதிமுகவினர் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications