இதுக்கு பருத்தி மூட்டை சென்னையிலேயே இருக்கலாம்.. தீபாவளி ஆம்னி பஸ் கட்டணம்.. நெட்டிசன்கள் ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை பார்த்த நெட்டிசன்கள், தங்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தீபாவளி , பொங்கல், ஆயுத பூஜை, சித்திரை திருவிழா என்பது போலீசுக்கு மட்டுமல்ல சென்னை வசிப்பவர்களுககும் சொந்த ஊரில், குடும்பத்தோடுகொண்டாடுவது எட்டாத விஷயமாக உள்ளது. தமிழகத்தின் பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் எல்லாமே சென்னையை சுற்றியே இருப்பதால் எல்லா ஊர் மக்களும் சென்னைக்கு வந்தால் தான் பிழைக்க முடியும் என்கிற நிலை உள்ளது.

Diwali 2023 omni bus fare from Chennai: Netizens reaction

தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சென்னை மாநகரத்துடன் நேரடி தொடர்பு இருக்கலாம் என்கிற அளவில் இங்கு வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை இருக்கிறது. விடுமுறை விட்டாலே சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு போகவிரும்புவார்கள். என்ன தான் சென்னையில் இருந்தாலும், பலரும் வாக்காளர்அடையாள அட்டையை மாற்றாமல், ரேஷன் கார்டை மாற்றாமல் வசித்து வருகிறார்கள்.

வார விடுமுறையிலேயே சென்னை அல்லாடுகிறது. இந்நிலையில் தீபாவளி, பொங்கல் என்றால் சொல்லவா வேண்டும். மக்கள் மொத்தமாக கிளம்புவார்கள். அவ்வளவு பேருக்கு சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்து வசதிகள், ரயில் வசதிகள் கொஞ்சம் கூட போதவில்லை என்பதே நிஜம். வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளை தான்அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் வழக்கமான நாட்களை விடஅதிகப்படியான கட்டணத்தை தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அதிகமாக இருக்கும். வழக்கமான விடுமுறை நாட்களைவிட மிகஅதிகமாக இருக்கும்.

இந்நிலையில் இந்த முறை தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு 5% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 25% குறைக்கப்பட்டுள்ளதாகம், ஆக மொத்தம் 2 ஆண்டுகளில் 30% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

சென்னை முதல் கோயம்புத்தூர் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,725 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ.2,874 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் சேலம் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,363 முதல் அதிகபட்சம் கட்டணமாக ரூ.1,895 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,960 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ.3,268 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை முதல் மதுரை வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,688 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ.2,554 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் திருச்சி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,325 முதல் அதிகபட்ச கட்டணமாக ரூ.1,841 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,211 முதல் அதிகபட்ச கட்டணமாக 3,765 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்தை பார்த்த நெட்டிசன்கள் பலர், இது ஊருக்கு போகாமல் சென்னையிலேயே இருக்கலாம் என்று நொந்து போய் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நான்கு பேர் கொண்ட குடும்பம் சென்னையில் இருந்து தீபாவளிக்கு மதுரைக்கு போய் வர வேண்டும் என்றால் பேருந்து கட்டணமாக போகும் போது 10000 ரூபாயும், வரும் போது 10 ஆயிரம் ரூபாயும் எடுத்து வைக்க வேண்டியதிருக்கும். அங்கு போய் செலவு செய்யும் தொகையை சேர்த்தால் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

மிக குறைந்த கட்டணத்தை கணக்கிட்டால் கூட 15 ஆயிரம் ரூபாயை போய் வரவே மக்கள் செலவு செய்யவேண்டியதிருக்கும். சென்னையில் குடும்பத்துடன் வாழும் பலர் 20 ஆயிரம் அல்லது 40 சம்பளத்தை வைத்தே வாழ்கிறார்கள். இவர்களால் இவ்வளவு பணத்தை செலவு செய்து ஊருக்கு போய் வர முடியாது என்பதால் சென்னையில் இருந்து ஊருக்கு செல்வது மிகவும் கடினம் என்கிறார்கள். சென்னை இருந்து திருச்சிக்கு 290 ரூபாய் அரசு பேருந்தில் ... ஆனால் ஆம்னி கட்டணம் 1800 ரூபாய் என்பது மிகஅதிகம் என்று நெட்டிசன்கள் குமுறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+