அடுத்த தீபாவளியில் கோடீஸ்வரன் தான்..தங்கத்தில் காசை போடலமா? பலனளிக்குமா பங்குகள்? நிபுணர்கள் அட்வைஸ்
சென்னை: கடந்த தீபாவளியை விட இந்த தீபாவளிக்கு தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அடுத்த ஆண்டு தீபாவளி வரை இந்த விலை உயர்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக பங்குச் சந்தைகளை கவனித்து வரும் நிபுணர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா? அல்லது பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது நல்லதா? என்பது குறித்து விளக்கி இருக்கின்றனர்.
இந்த தீபாவளியில், முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் பெரிய கேள்வி என்னவென்றால், தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்ய வேண்டும்? தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான உலோகங்களில் முதலீடு செய்யலாமா? அல்லது இந்திய பங்கு சந்தை குறியீடுகளில் (Nifty50, BSE Sensex) முதலீடு செய்யலாமா என்றுதான்.
கடந்த வருட தீபாவளியிலிருந்து தற்போது வரை தங்கம் 64%, வெள்ளி 85% வரை உயர்ந்துள்ளது. ஆனால் Nifty50 6.7% மட்டும் உயர்ந்துள்ளது. இதன் மூலம், கடந்த ஒரு ஆண்டில் பாதுகாப்பான உலோகங்கள் பங்குகளை முந்தியுள்ளன.

தீபாவளி முதலீடு
இதுதொடர்பாக பேசியுள்ள நிவாமா ப்ரொஃபஷனல் கிளையன்ட்ஸ் குழுமத்தின் எவிபி மற்றும் ஃபோரெக்ஸ், கமாடிட்டி தலைவரான அபிலாஷ் கோய்க்கரா," இந்திய பங்குகள் கடந்த வருடம் மிதமான வளர்ச்சியை மட்டுமே வழங்கியுள்ளன. உலகளவில் பங்குகள் கடந்த 12 மாதங்களில் 20-30% வரையில் உயரும் நிலையில் இருந்தாலும், இந்திய பங்குகளுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து $15 பில்லியன் அளவுக்கு நிதி வெளியேறியிருக்கிறது.
தங்கம் முதலீடு
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணமாக, உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்கா-இந்தியா வரி கட்டண மாறுபாடுகள், மத்திய வங்கிகளின் வட்டி குறைப்புகள், தங்க மற்றும் வெள்ளியின் எப்போதும் வலுவான தேவை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் ரூபாய் மதிப்பு 84.04/$ இருந்து 88.8/$ வரையிலும் தாழ்ந்ததால், தங்கத்தின் விலை கூடுதல் வட்டி மாறுபாடு மூலம் உயர்ந்துள்ளது.
இந்திய பங்கு சந்தை
மோடிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் நிறுவனத்தின் மூத்த கமாடிட்டி ஆராய்ச்சியாளர் மணவ் மோடி கூறுகையில்," முதலீட்டாளர்கள் அசாதாரண நிலைகளில் பாதுகாப்பான உலோகங்களுக்கு மூதலீட்டை மாற்றி வருகின்றனர். ஆனால், ஒரே வகை முதலீட்டில் அனைத்தையும் போடுவது என்பது எப்போதும் சிறந்த வழி அல்ல. ஆகவே, தங்கம் மற்றும் வெள்ளியுடன் சேர்த்து பங்குகள் மற்றும் பிற முதலீட்டு வகைகளையும் கொண்டிருப்பது முக்கியம்." என்கிறார்.
நிபுணர் ஆலோசனை
எல்கேபி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஜதீன் திரிவேதி கூறுகையில்," உலக பொருளாதார அசாதாரண சூழல் தொடர்ந்தால், தங்கம் 15-20%, வெள்ளி 30-50% வரை மேலும் உயரக் கூடும். ஆனால், அமெரிக்கா வரி கொள்கையை நிலைநிறுத்தி இந்திய வருமானம் நிலைத்திருக்க, வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் வருமானம் செய்ய ஆரம்பித்தால், Nifty 12-18% வரை உயரும் வாய்ப்பு உள்ளது." என்றார்.
வருமான வளர்ச்சி
அனந்த் ராதி வேல்த் லிமிடெட் இயக்குநர் சேர்தன் ஷெனோய் கூறுகைய்ல்," தங்கம் மற்றும் வெள்ளி கொள்கை பெரும்பாலும் உலகளாவிய தேவையும், நாணய மதிப்பும், அரசியல் சூழல்களால் உயர்வு காண்கிறது; பங்குகள் நீண்ட கால வளர்ச்சிக்கான நம்பிக்கையை வழங்குகின்றன. இந்தியா 2025ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 7.8% GDP வளர்ச்சி, வணிகம் மற்றும் உற்பத்தியில் வலுவான வளர்ச்சி, குறைந்த மொத்த பிணைப்பு விகிதம் 1.54% போன்ற சூழல்களால் பங்குகள் எதிர்வரும் தீபாவளிக்கு முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்." என்றார்.
பாதுகாப்பான முதலீடு
சுருக்கமாகப் பார்க்கும் போது, தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பான முதலீடு மற்றும் வருமான நிலைத் தன்மைக்கு உதவும், ஆனால் நீண்டகால வளர்ச்சிக்காக பங்குகளில் முதலீடு செய்வதே பயனுள்ளதாகும். முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் 15-25% தங்கம், 10-15% வெள்ளி, 25% வேறு பாதுகாப்பான உலோகங்கள், மீதம் பங்குகளை வைத்துக் கொள்வது சிறந்த சமநிலையை வழங்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
-
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications