வந்தாச்சு தீபாவளி.. சொந்த ஊர் போறீங்களா.. ஸ்பெஷல் பஸ் ரெடி.. 5 பேருந்து நிலையங்கள் முழு விபரம்
சென்னை: : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து பல பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி சிறப்பு பேருந்துகள்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் வேலைக்காகவும், படிப்பிற்காகவும் நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

16,895 பேருந்துகள்: நவம்பர் 9ஆம் தேதி இன்று முதல் 11ம் தேதி வரை சென்னையிலிருந்து பிற ஊர்களூக்கும், திருப்பூர், கோவை, திருச்சியில் இருந்து பிற நகரங்களுக்கும் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5 பேருந்துகள்: இன்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து மட்டும் 1,365 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 1,100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இதுவரை இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 3 நாட்களுக்கு சேர்த்து இதுவரை 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர நகரின் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மாதவரம் புதிய பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி. ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.
கே.கே. நகர் மா.போ.பேருந்து நிலையம்: ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ): அ) திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள். ஆ) தாம்பரம் இரயில் நிலைய திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்: பைபாஸ் வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம் சாலை பேருந்து நிறுத்தம் செய்யாறு. ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி மாநகர திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள். போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்)
5.புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர. இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை நிலையம், கோயம்பேடு அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை. தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி. புதுக்கோட்டை. திண்டுக்கல். விருதுநகர், திருப்பூர், ஈரோடு. ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு) இங்கிருந்து செல்லும்.
புக்கிங் மையங்கள்: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையங்கள் உள்ளன. அங்கே சென்று நேரடியாக பணம் கொடுத்து டிக்கெட் புக் செய்ய முடியும்.அது தவிர https://www.tnstc.in/home.html என்ற இணைய தள பக்கத்திற்கு சென்று புக் செய்ய முடியும்.
சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications