டாஸ்மாக் ஊழியர்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ்! யாருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரவர் ஊதியத்திற்கேற்ப ரூ 16 ஆயிரம் வரை ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும்.
நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ 16,800 வரை போனஸ் கிடைக்கும்.
முன்னதாக அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநில தலைவர் நா.பெரியசாமி, பொதுச்செயலாளர் த.தனசேகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- "தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு போனசாக 8.33 சதவீதமும், 11.67 சதவீதம் கருணை தொகையும் சேர்த்து 20 சதவீதம் போனஸ் வழங்க அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிர்வாகத்துக்கு நன்றி.அதேசமயம் அண்டை மாநிலமான கேரளாவில் மதுபான கடை பணியாளர்களுக்கு திருவோணம் மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை ரூ.95 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும், இது கடந்த ஆண்டை விட 29.5 சதவீதம் கூடுதல் என்று கணக்கிட்டு சுமார் ரூ.95 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு மதுபான வியாபாரத்தில் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கும் குறைவான வருமானம் பெறும் அரசு பணியாளர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் வகையில் போனஸ் வழங்கியுள்ளது என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.52 ஆயிரம் கோடி வரி வருவாயாக ஈட்டி தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.16,800 மட்டுமே மிகை ஊதியம் கிடைக்கும் என்பதை கருத்தில்கொண்டு, மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கூடுதல் மிகை ஊதியம் வழங்கவேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications