தீபாவளி கூட்டம்.. சென்னையில் இருந்து செல்லும் இந்த ரயில்களில் எல்லாம் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, காரைக்குடி, உள்பட தென்மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் கொல்லம் செல்லும் ரயில்களில் இன்று முதல் கூடுதல் தூங்கும் வசதிகள் (ஸ்லீப்பர் கோச்) பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைத்துள்ளது.

Recommended Video

    15 Seat தான் full ஆகுது | Koyambedu omni bus stand dull look | Oneindia Tamil

    சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை செல்லும் வண்டி எண் 08181 ரயிலில் நான்கு ஸ்லீப்பர் கோச் பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

    Diwali crowd: These trains from Chennai get more coaches

    இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரயிலில் ( வண்டி எண் 06063) ஆறு ஸ்லீப்பர் கோச் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி- சென்னை இடையே செல்லும் வண்டி எண்கள் 02633 / 02634 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னை எழும்பூர்- தூத்துக்குடி- சென்னை இடையே செல்லும் வண்டி எண்கள் 02693 / 02694 ரயில்களில் தலா ஒரு கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

    வண்டி எண் 02631 சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில், வண்டி எண் 02661 சென்னை எக்மோர்-செங்கோட்டை சிறப்பு ரயில், வண்டி எண் 06723 சென்னை எக்மோர்-கொல்லம் சிறப்பு மற்றும் வண்டி எண் 06866 தஞ்சாவூர் - சென்னை ஆகிய ரயில்களிலும் தலா ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் வண்டி 02605 சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயிலில், இரண்டாவது வகுப்பு உட்கார்ந்து செல்லும் இருக்கைகளுடன் சேர் கார் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+