தீபாவளி பண்டிகை.. விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இத்தனை பேர் கைதா? தமிழக காவல்துறை விளக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2095 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை 2.11. 2023 மற்றும் 13.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் பட்டாசு வெடிப்பது வழக்கமாக உள்ளது. பட்டாசு அளவுக்கு அதிகமாக வெடிப்பதனால் காற்றுமாசு ஏற்படுவதால், வயதானவர்கள் மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து வருகிறது தமிழக சுற்றுச்சூழல் துறை . தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேபோல் நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிக்கப்படுவது வழக்கம் ஆகும். அனுமதி அளித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில்தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் , தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட 12.11.2023 மற்றும் 13.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பட்டாசு வெடிப்பதற்கு குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6:00 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநில முழுவதும் 2246 பேர் மீது 2206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 2095 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2095 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். " இவ்வாறு தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications