தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா.. இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐஆர்சிடிசி ஆப், ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நவம்பர் 6 ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கும். இந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

பண்டிகை காலங்களில் ரயில் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பொங்கல், தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாட விரும்பும் மக்கள் சாரை சாரையாக பயணிப்பார்கள். பலரும் ஒரே நாளில் புறப்படுவதால் பஸ், ரயில்களில் டிக்கெட் முன்னதாகவே புக் ஆகி காலியாகிவிடும்.

Diwali train ticket booking

இதனை தவிர்க்க ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. எனினும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனால் ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவே புக் செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் நவம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

சனிக்கிழமை விடுமுறை என்பதால் பலரும், வெள்ளி மற்றும் வியாழக்கிழமையே சொந்த ஊர் செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். அந்த வகையில் வியாழக்கிழமைக்கு சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் அதாவது வரும் நவம்பர் 5 ஆம் தேதி செல்ல விரும்புபவர்கள் இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தனர். இன்று காலை 8 மணி முதல் தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

நவம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக் கிழமை பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். நவம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை மறுநாள் காலையில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஐஆர்சிடிசி இணையதளம், செல்போன் செயலி மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ரயில் நிலையங்களில் வழக்கமாக உள்ள டிக்கெட் கவுண்டர்களிலேயே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளே மளமளவென டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரயில்களில் டிக்கெட் முடியும் தருவாயில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சென்னையில் வசித்து வரும் வடமாநிலத்தவரும் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில் நிலையங்களில் குவிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+