பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் இதை மட்டும் பண்ணிடாதீங்க! பெற்றோருக்கு முக்கியமான டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் பட்டாசு வெடித்து வருகின்றனர். பட்டாசுகள் வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பெற்றோர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். தீக்காயம் ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்.

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் தெளிவு இல்லை. தீக்காயம் ஏற்பட்டவுடன் காயத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். சிலர் தண்ணீர் பட்டால் கொப்புளம் வரும் என நினைக்கிறார்கள். அது தவறானது என தீயணைப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் ஊற்றிவிட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இங்க், புளித்த மாவு ஆகியவற்றை காயம் ஏற்பட்ட இடங்களில் வைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

diwali 2024 health crackers

தீக்காயம் ஏற்பட்ட உடன் செய்ய வேண்டியவை:

1. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்னதாக நல்ல உடல் வலிமையுடன் இருப்பவர்கள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோரை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றலாம்.

2. முடிந்தால் மின்சாரப் பெட்டியை அணைத்து விட்டு, கேஸ் சிலிண்டரை வெளியே கொண்டு வந்துவிடவேண்டும்.

3. தீயை முதலில் அணைக்க வேண்டும். தீயை அணைக்க எளிதாக முடியாவிட்டால் போர்வையை சுற்றி அணைக்க வேண்டும். கைகளிலோ அல்லது கால்களிலோ, தீக்காயம் ஏற்பட்டால் முதலில் அணிகலன்களை கழற்றி விட வேண்டும்.

4. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் 15 நிமிடம் நீரில் கழுவ வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

diwali 2024 health crackers

தீக்காயம் ஏற்பட்டால் செய்யக்கூடாதவை:

1. தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைக்கக்கூடாது. ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவதால் தோல் திசு சேதம் ஏற்படலாம்.

2. தீக்காயம் மேல் வீட்டில் உபயோகிக்கக் கூடிய பொருட்களான மஞ்சள், காபி பவுடர், டீத்தூள், பேஸ்ட் போன்றவற்றை தீக்காயம் மேல் பயன்படுத்தக் கூடாது.

பட்டாசு வெடிக்கும்போது செய்யக்கூடியவை:

தீபாவளி சமயத்தில் தீக்காயங்கள் ஏற்படாமல் இருக்க திறந்த வெளிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தரமான பட்டாசுகளை முறையாக அனுமதி பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும், பட்டாசுகள் வெடிப்பதை பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். இரண்டு வாளி தண்ணீர், மணல் கட்டாயம் பட்டாசு வெடிக்கும் இடத்தின் அருகில் இருக்க வேண்டும். கட்டாயம் பெற்றோர் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசு, மத்தாப்பு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.

diwali 2024 health crackers

பட்டாசு வெடிக்கும்போது செய்யக்கூடாதவை:

வீடுகளுக்குள் பட்டாசு வெடிக்க கூடாது. கைகளில் பிடித்துக்கொண்டு பட்டாசை பற்ற வைக்க கூடாது. பற்ற வைக்கப்பட்ட பட்டாசை குனிந்து பார்க்கக்கூடாது. தவறாக பற்ற வைக்கப்பட்ட அல்லது பாதி எரிந்த பட்டாசை தொடக்கூடாது. சிறு குழந்தைகளை தனியாக பட்டாசுகளை கையாள அனுமதிக்க கூடாது. அடுத்தவர்களை குறிவைத்து பட்டாசை பற்ற வைக்க கூடாது. குறுகலான சந்துகளில் பட்டாசை வெடிக்கக் கூடாது.

சென்னையைப் பொறுத்தவரை தீ விபத்து ஏற்பட்ட உடன் 3 நிமிடங்களுக்கு உள்ளாக அந்த இடத்தை அடையும் வகையில், சென்னையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 70 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும், 50 மெட்ரோ குடிநீர் வாகனங்களும் இணைந்து பணியாற்றும். தீபாவளி பண்டிகையையொட்டி, தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனையில் தனி பிரிவு செயல்பாட்டில் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+