தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா.. ரயிலில் இதை பண்ணிடாதீங்க.. ரூ. 1000 அபராதம்
சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 20 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் விற்பனை என அனைத்துப் பகுதிகளும் களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்வார்கள் என்பதால் ரயில்வே காவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் ரயில் பயணிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ரயிலில் தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு சென்றால் ரூ. 1000 அபராதமாக விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தொழில், வேலை, கல்வி என பல்வேறு தேவைகளுக்காக வெளியூரில் வசித்து வரும் பல்வேறு மாநில, மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதனால், பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சிறப்பு, பேருந்துகள், சிறப்பு ரயில்கள் ஆகியவை பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ளன.

நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில பொருள்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருள்களான அடுப்புகள், ரசாயனங்கள், பட்டாசுகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சில பொருள்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சமயத்தில் பட்டாசு உள்ளிட்ட பொருள்களை ரயில்களில் பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ரயில்களில் தடை செய்யப்பட்ட, ஆபத்தான பொருள்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குறிய குற்றம். எளிதில் தீப்பற்றும், வெடிக்கக்கூடிய பொருள்களை ரயிலில் எடுத்துச் செல்லாமல் பயணிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ரயிலில் பட்டாசு கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருவதால் ரயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரயிலில்ல பட்டாசு உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது. ஆனாலும், சிலர் விதிகளை மீறி எடுத்துச் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்று முதல் முறையாக பிடிபடுபவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications