3 நாள்.. சென்னை-நெல்லை இடையே தீபாவளி சிறப்பு ரயில்.. உடனே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்! நல்ல சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை-நெல்லை இடையே 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்கான டிக்கெட்டை பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம் எனவும் தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

Diwali special train between Chennai Central and Tirunelveli

குறிப்பாக சென்னையில் இருந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நிறைய மக்கள் கிளம்புகின்றனர். இந்நிலையில் தான் தீபாவளி டிக்கெட் முன்பதிவு ரயில்களில் ஏற்கனவே முடிந்துவிட்டது.

ரயிலை ஒப்பிடும்போது அரசு பஸ், தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் என்பது அதிகமாக உள்ளது. இதனால் தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று தென்னக ரயில்வே சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் தலா 3 நாட்கள் இயங்க உள்ளது.

அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06051) வரும் 8 ம் தேதி, 15ம் தேதி, 22ம் தேதி என 3 புதன்கிழமைகளில் இயங்க உள்ளது. இந்த ரயில் இந்த 3 நாட்களும் காலை 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதன்பிறகு சென்னை எழும்பூரை அடையும் ரயில் அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

அதேபோல் மறுமார்க்கமாக திருநெல்வேலி-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06052) என்பது வரும் 9, 16, 23 ஆகிய நாட்களில் (வியாழக்கிழமைகளில்) இயங்க உள்ளது. இந்த ரயில் 3 நாட்களும் மாலை 3 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். அதன்பிறகு 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. இதனால் பயணிகள் இப்போதே முன்பதிவு செய்யலாம் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+