தீபாவளி: சென்னை டூ தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வேயில் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். பயணிகள் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குஷியாக கொண்டாடும் பண்டிகை. சென்னையில் வேலை, தொழில், கல்வி என பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு மாவட்ட மக்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

Diwali Train

வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) இரவு 11.35 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

எழும்பூரில் இருந்து அக்டோபர் 18 ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நீடாமங்கலம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல, மதுரையில் இருந்து அக்டோபர் 18 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில் (எண்: 06162) மறுநாள் இரவு 7.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல, தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06013) மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06014) அக்.20 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 8.45 மணிக்குப் புறப்படும். மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல, மதுரையில் இருந்து அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) மறுநாள் மாலை 4.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+