தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா.. ரயிலில் புக்கிங் தொடங்கிடுச்சு.. உடனே டிக்கெட்டை போடுங்க!
சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு (Diwali train booking) இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் அக். 16 முதல் 21 ஆம் தேதி வரை முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதேபோன்று சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப அக்.21 முதல் 23 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 16 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம்.
சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், விடுமுறை நாட்களில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
பயணிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் விலையை பலமடங்கு ஏற்றி வைத்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள். இதனால், பயணிகள் வேறு வழியின்றி கூட்ட நெரிசலில் சிக்கி பயணிப்பதையும் காண முடிகிறது. ரயில்களை பொறுத்தவரை 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
இதனால், கடைசி நேரத்தில் டிக்கெட் இன்றி தவிப்பதை தவிர்க்கும் விதமாக பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்பவர்கள் அக்டோபர் 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) டிக்கெட் முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம்.
விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
அக்டோபர் 17 ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்டோபர் 18 ஆம் தேதிக்கான முன்பதிவை நாளை மறுநாளும் செய்யலாம். அதேபோல, அக்டோபர் 19 ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 20 ஆம் தேதியும், தீபாவளி நாளான, 20 ஆம் தேதிக்கான முன்பதிவை, வரும், 21 ஆம் தேதியும் செய்து கொள்ளலாம்.
16 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்துள்ளன. சென்னையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் மட்டுமே காண்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications