தீபாவளி ரயில் டிக்கெட்.. நாளை காலை 8 மணிக்கு புக்கிங் தொடக்கம்.. எந்த தேதிக்கு எப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர் போவதற்காக பிளான் செய்து வருகிறீர்களா? இதோ முக்கியமான அறிவிப்பு உங்களுக்காகவே வெளியாகியுள்ளது. இந்த தீபாவளி நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6-ம் தேதி அதாவது நாளை முதல் தொடங்குகிறது.

ரயில்களில் இப்போது பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அதன்படி, நவம்பர் 5-ம் தேதி வியாழக்கிழமை பயணம் செய்ய விரும்புபவர்கள் செப்டம்பர் 6-ம் தேதி காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். நவம்பர் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை பயணத்துக்கு செப்டம்பர் 7-ம் தேதியும், நவம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை பயணத்துக்கு செப்டம்பர் 8-ம் தேதியும் முன்பதிவு தொடங்கும்.

Commuters booking train tickets for Diwali festival travel

நாளை முதல் புக்கிங் ஆரம்பம்

தீபாவளி நாளான நவம்பர் 8-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய நினைப்பவர்கள் செப்டம்பர் 9-ம் தேதி காலை 8 மணிக்கு டிக்கெட் எடுக்கலாம். அதேபோல், தீபாவளி முடிந்து சொந்த ஊரில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப விரும்புபவர்கள் நவம்பர் 9-ம் தேதி பயணத்துக்கு செப்டம்பர் 10-ம் தேதியும், நவம்பர் 10-ம் தேதி பயணத்துக்கு செப்டம்பர் 11-ம் தேதியும் புக்கிங் செய்யலாம்.

எந்த தேதிக்கு எப்போது டிக்கெட் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 5 பயணம் செய்வோருக்கு செப்டம்பர் 6 முன்பதிவு செய்யலாம்.. நவம்பர் 6 பயணம் செய்வோருக்கு செப்டம்பர் 7ம் தேதியும், நவம்பர் 7 பயணம் செய்பவர்களுக்கு செப்டம்பர் 8ம் தேதியும், நவம்பர் 8 பயணம் செய்வோருக்கு செப்டம்பர் 9ம் தேதியும், நவம்பர் 9 பயணம் செய்பவர்களுக்கு செப்டம்பர் 10ம் தேதியும், நவம்பர் 10ம் தேதி பயணம் செய்பவர்களுக்கு செப்டம்பர் 11ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

புக்கிங் நேரம் எப்போது

அனைத்து முன்பதிவுகளும் காலை 8 மணிக்கு தொடங்கும். IRCTC இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும், ரயில்வே முன்பதிவு கவுண்டர்கள் மூலமாகவும் டிக்கெட் எடுக்க முடியும்.

தீபாவளி நேரத்தில் ரயில் டிக்கெட்டுகளுக்கு வழக்கத்தைவிட அதிகமான தேவை இருக்கும். முக்கியமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக புக்கிங் ஆக வாய்ப்பு உள்ளது. சில முக்கிய ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் காலியாகிவிடும் நிலைமையும் ஏற்படலாம்.

கடைசி நிமிடம் வேண்டாம்

அதனால், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பயண தேதியை முடிவு செய்து கொள்வது நல்லது. IRCTC மூலம் டிக்கெட் எடுப்பவர்கள், பயணிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். பணம் செலுத்தும் முறையையும் தயாராக வைத்திருப்பது உதவும். காலை 8 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பே IRCTC-யில் Login செய்து தயாராக இருப்பதும் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

எனவே, இந்த தீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் செல்ல நினைப்பவர்கள், உங்கள் பயண தேதி என்ன என்பதை முதலில் முடிவு செய்து, அதற்கான முன்பதிவு தேதியை இப்போதே குறித்துக் கொள்ளுங்கள்....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+