விஜய் பிரதமர் வேட்பாளரா? தவெகவினரை டென்ஷனாக்கிய டிகே சிவக்குமார்.. காஞ்சிபுரத்தில் சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் - தவெக கூட்டணியில் உள்ளது. இப்படியான சூழில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெகவினர் முன்னிறுத்துவது பற்றி கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரிடம் (காங்கிரஸ்) இன்று காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதுபற்றி பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கு பதில் நாட்டை கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியது தவெகவினரை டென்ஷாக்கி உள்ளது.

dk-shivakumar-says-that-i-dont-want-to-speak-this-after-raises-question-about-is-vijay-as-a-pm-cand

சென்னை அருகே கோவளம் தனியார் ஹோட்டலில் தென்மாநில முதல்வர்களின் மாநாடு இன்று நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இந்த மாநாடு நடந்தது. இதில் முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வர் விடி சதீசன், தெலுங்கானா துணை மல்லு பாட்டி விக்ரமார்கா பங்கேற்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்காத நிலையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்றார்.

இந்த மாநாட்டுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''இன்று ராஜீவ் காந்தியின் பிறந்தநாள். அவருக்கு மரியாதை செலுத்தினேன். இந்த நாட்டின் இளைஞர்கள் யாரும் அவரை மறக்க முடியாது. ஏனென்றால் இளைஞர்கள், மாணவர்களை அவர் நம்பினார். 18 வயது நிரம்பியவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் முதல் எம்பி வரை ஓட்டளித்து தேர்வு செய்யலாம் என்பதை கொண்டு வந்தார்.

நாங்கள் எல்லாம் அவரது கட்சியின் தயாரிப்புகள். இதனால் அவரது செயல்பாட்டை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உள்ளோம். ஏற்கனவே ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ' யாத்திரை நடைப்பயணத்தின்போது நான் இங்கு வந்துள்ளேன். இப்போது இந்த மீட்டிங்கின் மூலமாக மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு நேரு குடும்பம் நிறைய பங்களிப்பை வழங்கி உள்ளது. தியாகம் செய்துள்ளது. காங்கிரஸ் பலம் தான் நாட்டின் பலம். காங்கிரஸ் வரலாறு தான் நாட்டின் வரலாறு. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஜவஹர்லால் நேரு, சோனியா காந்தி ஆகியோரின் தியாகம் இந்த நாட்டுக்காக இருந்துள்ளது. இதனல் கர்நாடகா முதல்வர் என்ற அடிப்படையிலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் என்பதாலும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினேன்'' என்றார்.

இந்த சமயத்தில், டிகே சிவக்குமாரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ''விஜய் முதல்வராக இருக்கிறார். தவெகவினர் தற்போது அவரை பிரதமர் வேட்பாளராக சொல்லி வருகின்றனர். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு டிகே சிவக்குமார், ''அது எனக்கு தெரியாது. நான் எது பற்றியும் பேச விரும்பவில்லை. எதுபற்றியும் நான் பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கு பதில் நாட்டை கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். தென்னிந்திய முதல்வர்கள் மீட்டிங்கில் இன்று முக்கிய விஷயம் பேசப்பட்டது. 1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்'' என்று கூறி சென்றார்.

தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தமிழகத்தில் இருந்து பிரதமர் வர வேண்டும் என்று சட்டசபையில் பேசினார். இது ராகுல் காந்திக்கு போட்டியாக விஜய்யை நிறுத்தும் வகையில் அவர் பேசியிருந்தார். இந்த கருத்தால் காங்கிரஸ் கட்சி தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ளது. கூட்டணியில் இருந்தாலும் ஆதவ் அர்ஜூனாவின கருத்தை ஏற்றால் மேலிடம் சம்மதிக்காது என்றும், ஏற்காவிட்டால் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் வரும் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர். அந்த வகையில் தான் டிகே சிவக்குமார் பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+