“அண்ணாமலைக்கு ஒண்ணுமே தெரியாது.. தமிழ்நாட்டுக்கு விசுவாசமா இல்லை”.. வறுத்தெடுத்த டிகே சிவக்குமார்!
சென்னை: "அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது. கட்சி அவருக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறார்.. தமிழ்நாட்டுக்கு உண்மையாக இல்லை" என விமர்சித்துள்ளார் கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு பெங்களூர் கிளம்புவதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய கூட்டம் நடந்ததாக அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "இங்கு அண்ணாமலை சொன்னது முக்கியம் இல்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டிற்கு என்ன சொன்னார்கள் என்பது தான் முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது. கட்சி அவருக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறார்.. தமிழ்நாட்டுக்கு உண்மையாக இல்லை, அவர் வேலையை செய்யட்டும்" எனத் தெரிவித்தார்.
மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால் அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த டிகே சிவக்குமார், "இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கிறார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு அதுகுறித்து பேசலாம்" என்றார்.
தொடர்ந்து பேசிய டிகே சிவக்குமார், "இங்கு மாநிலத்தில் காங்கிரஸ் இருக்கின்றார்கள். இது திமுக அரசு ஏற்பாடு செய்த கூட்டம். 40 முதல் 50 அரசியல் கட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்திருந்தார். தென்னிந்தியாவை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்ததவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங், கர்நாடகா துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர்.
"Showing loyalty to his party": DK Shivakumar slams Annamalai's delimitation remark
— ANI Digital (@ani_digital) March 23, 2025
Read @ANI Story | https://t.co/YhWfmH5Ab8#Karnataka #Shivakumar #Annamalai #Delimitation pic.twitter.com/z2rV5Q78hL
கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு பாஜகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான கேள்விக்கு நேற்று பதிலளித்த டி.கே. சிவக்குமார், "பாஜக நடத்தும் கருப்புக்கொடி போராட்டத்தை வரவேற்கிறேன். என்னை அவர்கள் திகார் சிறையில் அடைத்தபோதுகூட பயப்படாதவன், அவர்கள் நடத்தும் இந்த கருப்புக்கொடி போராட்டத்துக்கா நான் பயப்படப்போகிறேன். அண்ணாமலையை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் கர்நாடகாவில் தான் அவர் பணியாற்றினார். எங்களுடைய பலம் என்ன என்று அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில்,"ஆம், நான் ஒரு காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்காக சேவை செய்தேன். அதனை நினைவுகூர்ந்து என்னை குறிப்பிட்டு பேசியதற்கு நன்றி. இந்த எளிய மனிதனை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும், சித்தராமையாவை அவரது நாற்காலியில் இருந்து வீழ்த்தி கர்நாடக முதல்வராகும் உங்கள் அயராத முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்து இருந்தார். இருவருக்கும் இடையேயான வார்த்தை மோதல் தடித்துள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications