10க்கு பத்து தான்.. பிடிகொடுத்துப் பேசாத பிரேமலதா? அதிமுக- திமுகவே ஷாக் ஆயிடுச்சாம்? தனித்தா போட்டி?
சென்னை: 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது 10 சதவீதம் வாக்கு வங்கியை அறுவடை செய்த தேமுதிக, இப்போது இரண்டு சதவீதத்திற்கும் கீழாக வாக்கு வங்கியை பறிகொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் விஜயகாந்த் பெயருக்காக அதிமுக- திமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கலாம் என திட்டமிட்டு இருக்கும் வகையில் இதுவரை பிரேமலதா விஜயகாந்த் பிடி கொடுக்கவில்லை என்கின்றனர். இதை அடுத்து கடைசி நேரத்தில் கழட்டி விடப்படும் நிலைக்கு தேமுதிக செல்லலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேர்தல் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்பதால், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை முன்னதாகவே முடிக்க வேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கு உள்ளது.
ஆனால், இந்த சூழலிலும் தேமுதிக மட்டும் இன்னும் தனது கூட்டணியை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006-ம் ஆண்டு முதல் இதுவரை மூன்று முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக, நான்காவது முறையாக தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்
ஆனாலும், இந்த முறை திமுக கூட்டணியா, அதிமுக கூட்டணியா என்ற முடிவை எடுக்காமல், இரு தரப்புடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவே, திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளையும் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசியல் களம் இந்த முறை நான்கு முனைப் போட்டியாக மாறியுள்ளது. ஆளும் கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனி அணியாகவும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவும் களம் தயாராகியுள்ளது.
தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை
இந்த நிலையில், கூட்டணியில் சேரும் கட்சிகளின் எண்ணிக்கையும், அவர்கள் கேட்கும் தொகுதிகளும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திமுக இந்த முறை பலம் வாய்ந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது. கடந்த தேர்தலில் இருந்த கூட்டணியுடன் கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளதால், திமுக அணியின் வலிமை மேலும் அதிகரித்துள்ளது. மறுபுறம், அதிமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட சிறிய கட்சிகளையும் இணைத்துள்ளது.
தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை
இந்த இரண்டு பெரிய கூட்டணிகளுக்கும் நடுவில் தேமுதிக தனது பேரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புகளிடமும் 30 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என்று தேமுதிக கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என்றும் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோரிக்கைகள் இரு கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக வாக்கு வங்கி சரிவு
இதற்கு பதிலாக, திமுக மற்றும் அதிமுக இரு தரப்பும் ஒரே குரலில் கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. தேமுதிக ஒருகாலத்தில் 10.5 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தாலும், தற்போது அந்த வாக்கு சதவீதம் ஒரு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டதாகவும், முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், அதிகமான தொகுதிகள் வழங்க முடியாது என்று இரு கட்சிகளும் தெளிவாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த்
இதையடுத்து, தேமுதிக படிப்படியாக தனது கோரிக்கையை குறைத்து வந்துள்ளது. தற்போது, பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரட்டை இலக்கமான 10 தொகுதிகள் என்ற அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல். ஆனால், திமுக தரப்பில் 6 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்க தயாராக இருப்பதாகவும், அதிமுக தரப்பில் 8 தொகுதிகள் வழங்கலாம், மாநிலங்களவை சீட்டை பின்னர் பேசலாம் என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது.
திமுக அதிமுக கூட்டணி
இந்த ஆஃபர்களையும் ஏற்காமல், தேமுதிக இன்னும் தனது கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்து வருகிறது. கடலூரில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி முடிவாகிவிட்டதாகவும், தேமுதிக சேரும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்றும் தெரிவித்தார். ஆனால், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இன்னும் கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவிக்காதபோது, தேமுதிக ஏன் அவசரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த பேச்சு, தொண்டர்களிடையே எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
என்.டி.ஏ கூட்டணி
இதற்கிடையில், சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பாகவே, தமிழக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வந்திருந்தார். அவர் டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன், பிரேமலதா விஜயகாந்துடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதால், பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கூட்டணியை தலைமை தாங்கும் அதிமுக கூட இத்தகைய கோரிக்கையை வைக்கவில்லை என்று கூறி, அந்த பேச்சுவார்த்தை அத்துடன் முடிவுக்கு வந்ததாக தகவல்.
தமிழக அரசியல்
இந்த சூழலில், தேமுதிக தனது கோரிக்கைகளில் மேலும் இறங்கி வந்தால் மட்டுமே, திமுக அல்லது அதிமுக தரப்பில் கூட்டணி கதவுகள் திறக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது. இல்லையெனில், தேமுதிக தனித்து போட்டியிடும் சூழலும் ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக எடுக்கும் இறுதி முடிவு, தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications