ஆளுநர் தேநீர் விருந்தில் குவிந்த தலைவர்கள்.. ஆப்சென்ட் ஆன தேமுதிக, ஓபிஎஸ்.. யாரெல்லாம் பங்கேற்றனர்?
சென்னை: தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை திமுகவின் கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், அமைச்சர்கள் பங்கேற்றனர். அதிமுக, பாமக சார்பில் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், தேமுதிக ஆப்செண்ட் ஆகியுள்ளது.
குடியரசுத் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிறப்பு தேநீர் விருந்து அளித்தார். இதில், பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தேசப்பிதா மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதால், தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது. அதேபோல், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேநீர் விருந்தை புறக்கணித்தன.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்துவிட்டு திருச்சி அருகே சிறுகனூரில் நடைபெறும் விசிக மாநாட்டிற்குச் சென்றார். விசிக சார்பில் நடைபெற்று வரும் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின்.

அதே சமயம், திமுக சார்பில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரகுபதி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோரும் ஆளுநரின் விருந்தில் பங்கேற்றனர்.
அதிமுக சார்பில் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா ஆகியோரும், பாஜக சார்பில் எல்.முருகன், வானதி சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாஜகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் இந்த விருந்தில் பங்கேற்றனர். பாமக சார்பில் ஜிகே மணி இந்த விருந்தில் பங்கேற்றார். ஆனால், தேமுதிக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

பாஜக, வரும் லோக்சபா தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், இன்றைய ஆளுநர் விருந்தில், தேமுதிக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications