விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டி! தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிரேமலதா
சென்னை: தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன், "விஜய பிரபாகரன்" போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று முன் தினம் கையெழுத்தானது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், தேமுதிக வேட்பாளர்களுக்கான நேர்காணலை நேற்று நடத்தினார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். நேர்காணலுக்குப் பிறகு, வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என பிரேமலதா தெரிவித்திருந்தார். மேலும், 24ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார் பிரேமலதா.
இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டி
மத்திய சென்னை தொகுதியில் பார்த்தசாரதி போட்டி
திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி போட்டி
தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன் போட்டி
கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து போட்டி
மத்திய சென்னை தொகுதியில் ப.பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி) தொகுதியில் கு.நல்லதம்பி, கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து, தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விஜய பிரபாகரன்: மறைந்த விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். விஜயகாந்துக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட போதிலிருந்தே கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் விஜய பிரபாகரன்.

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் குடும்பத்தினர் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பிறகு மதுரைக்கு குடிபெயர்ந்தனர். எனவே விருதுநகரில் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
பார்த்தசாரதி: மத்திய சென்னை தொகுதியில் தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி களமிறங்குகிறார். இவர் தேமுதிக துணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

சிவக்கொழுந்து: கடலூர் தொகுதியில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். இவர் பண்ருட்டி எம்எல்ஏவாக இருந்தவர். கடலூர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்து வருகிறார் சிவக்கொழுந்து.

நல்லதம்பி: திருவள்ளூர் (தனி) தொகுதி வேட்பாளராக நல்லதம்பி களமிறக்கப்பட்டுள்ளார். எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான நல்லதம்பி திருவள்ளூரில் களமிறங்குகிறார். இவர் தேமுதிக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

சிவநேசன்: தஞ்சாவூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக சிவநேசன் போட்டியிடுகிறார். இவர் தஞ்சாவூர் மாநகர தேமுதிக அவைத் தலைவராக இருந்தவர்.

-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications