சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரி, தேமுதிகவுக்கு திமுக இடம் தருவதாக வைத்துக் கொள்வோம்.. என்ன நடக்கும்??

திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு இருக்கிறதா? என தெரியவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நேரத்தில் திமுக - அதிமுகவுடன் பேச்சு... தேமுதிகவுக்கு இது தேவையா!

    சென்னை: ஒருவேளை.... திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவதாக வைத்து கொண்டால்.. நிலைமை என்னாகும்? அந்த கூட்டணி எது மாதிரியாக இருக்கும்?

    இன்று ஒரு ஸ்டார் ஹோட்டலில் பியூஷ் கோயல், அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் சுதீஷ். கொஞ்ச நேரத்தில் கூட்டணி கையெழுத்தாகிவிடும் என்று எதிர்பார்த்தால், இன்னொரு பக்கம் திமுகவிடம் நிர்வாகிகளை அனுப்பி வைத்திருக்கிறது தேமுதிக.

    இதை துரைமுருகனே புட்டு புட்டு வைத்துவிட்டார். அத்துடன் இப்போதைக்கு சீட் எதுவும் எங்களிடம் இல்லை, இருந்தால்தானே தருவதற்கு, கட்சி தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கைவிரித்துள்ளார்.

    அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும்.. துரைமுருகனுடன் பேசியது உண்மை.. சுதிஷ் பளிச் அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும்.. துரைமுருகனுடன் பேசியது உண்மை.. சுதிஷ் பளிச்

    எப்படி எதிர்கொள்ளும்?

    எப்படி எதிர்கொள்ளும்?

    ஒருவேளை துரைமுருகன் சொல்வது போல் கட்சி தலைவரே தேமுதிக குறித்து முடிவு செய்கிறார் என்று வைத்து கொள்வோம், அதாவது தேமுதிவை கூட்டணிக்குள் சேர்ப்பதாக இருந்தால் திமுக எப்படி எத்தனை தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுகிறது.

    4 சீட் தருமா?

    4 சீட் தருமா?

    எப்படியும், தேமுதிக கேட்ட தொகுதிகளை திமுக தராது. (முன்பே தராதபோது இப்போது சுத்தமாக வாய்ப்பு இருக்காது) தங்களால் 3 அல்லது 4தான் தர முடியும் என்று ஏற்கனவே திமுக தேமுதிகவுக்கு சொல்லி இருந்தது. இப்போதும் அதே 4 தர திமுக முன்வருமா என தெரியவில்லை.

    திமுகவுக்கு 16?

    திமுகவுக்கு 16?

    அப்படியே தந்தாலும், கூட்டணிகளுக்கு பிரித்து கொடுத்தது போக கையில் இருப்பதோ வெறும் 20தான். இதில் தேமுதிகவுக்கு 4 தந்தால், மிச்சமிருக்கும் 16-ல் தான் திமுக போட்டியிட வாய்ப்பு உள்ளது. இப்படித்தான் 2004ம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த திமுக, அந்த தேர்தலில் காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வழங்கியது போக மீதிருந்த 16 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. அதனால் இந்த முறையும் இதே 16தான் திமுகவுக்கு கிடைக்குமா என தெரியவில்லை.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியிடமிருந்து ஒன்றிரண்டு தொகுதிகளை வாங்கி தேமுதிகவுக்கு வழங்கப்படுமா என்பதும் புரியவில்லை. ஆனால் காங்கிரஸ் இதற்கு ஒத்து கொள்ள வேண்டுமே? கிடைத்த 10 சீட்டையே எந்த கோஷ்டிக்கு பிரித்து தருவது என்று அந்த கட்சிக்குள் ஒரு கெடுபிடியே நடந்து வருகிறது.

    அதிருப்தி

    அதிருப்தி

    ஒருவேளை தேமுதிக கூட்டணிக்கு வந்தால் திமுகவுக்கு பலம்தான். பாமக இல்லாவிட்டாலும் ஓட்டுக்களை சிதறடிக்க தேமுதிகவாவது இருக்கிறதே என்ற ஒரு பிளஸ் கண்டிப்பாக கிடைக்கும். அதேசமயம், கொஞ்சம் கூட அரசியல் அடிப்படையே இல்லாமல் அலை பாயும் தேமுதிகவை உடன் சேர்த்து சீட்டுகளையும் தூக்கிக் கொடுத்தால் பொதுமக்களின் அதிருப்தியை திமுக சம்பாதிக்க நேரிடும் என்ற ரிஸ்க்கும் இதில் உள்ளது.

    English summary
    If the 4 seats are alloted for DMDK, DMK is likely to contest in 16 seats in MP Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X