இதுதான் சரியாக வரும்.. அறிவித்துவிடலாம்.. கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுத்த விஜயகாந்த்!
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய முடிவை எடுத்துவிட்டார் என்று செய்திகள் வருகிறது.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய முடிவை எடுத்துவிட்டார் என்று செய்திகள் வருகிறது.
கடந்த மூன்று வாரமாக இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது.
திமுக கூட்டணியா, தேமுதிக கூட்டணியா, மூன்றாவது அணியா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக தேமுதிக நிறைய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

பேசினார்கள்
முதலில் தேமுதிக அதிமுகவிடம் மட்டுமே தேர்தல் கூட்டணி குறித்து பேசியது. அதிமுக - பாஜக தேர்தல் கூட்டணியில் இணைவது கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று தேமுதிக நினைத்தது. இதனால் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தலைமையில் தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் இல்லை
ஆனால் இதில் தேமுதிக கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பாமக போலவே தேமுதிக 7 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் கேட்டது. ஆனால் அதிமுக இதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் கூட்டணி பேரம் படியாமல் இருந்தது.

திமுகவிடம் பேச்சு
திமுகவிடமும், தேமுதிக இதேபோல் பேசி பார்த்தது. ஆனால் திமுகவிடம் தேமுதிக மொத்தம் 7+1 இடங்களை கேட்டது. ஆனால் திமுக 5 இடங்களுக்கு அதிகமாக கொடுக்க முடியாது என்று கூறி இருக்கிறது. இதனால் திமுக - தேமுதிக கூட்டணியும் உறுதியாகாமல் போனது.

அதிமுக தொடர்ந்து
இதையடுத்து அதிமுக தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக படாதபாடுபட்டது. இந்த நிலையில் தேமுதிக பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கொஞ்சம் இறங்கி வந்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

விஜயகாந்த் முடிவு
தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக்சபா கூட்டணி குறித்து முக்கிய முடிவை எடுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள். அதிமுகவுடன் தேமுதிக சேர்வது உறுதியாகிவிட்டது. நல்ல நாளுக்காக காத்து இருக்கிறார்கள். இன்னும் இரண்டு தினங்களில் அந்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்று கூறுகிறார்கள்.

எத்தனை இடங்கள்
அதன்படி தேமுதிக மொத்தம் 5 லோக்சபா இடங்களை பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல் 1 ராஜ்யசபா இடத்தையும் தேமுதிக பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. வடமாவட்டங்களில் இருக்கும் சில 5 தொகுதிகள் தேமுதிக கட்சிக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications