Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது என்று மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்திற்கு ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

DMDK chief Vijayakanths condition stable says hospital

விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. தேமுதிக தரப்பில் நவ.20 அன்று வெளியிடபட்ட அறிக்கையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள்.

இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. விஜயகாந்த் 5-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜயகாந்தின் அனைத்து உடல் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது. சில நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்புவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+