இதுக்கு பாஜகவே பரவாயில்லை போலயே!.. நோட்டாவுடன் போட்டி போட்டு முட்டி மோதி மூக்குடைந்த தேமுதிக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக நோட்டாவை விட வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது கேப்டனின் கட்சிதானா என எண்ண வைக்கிறது.

Recommended Video

    நோட்டாவிடம் தோற்ற தே.மு.தி.க.... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

    2006 ஆம் ஆண்டு தேமுதிக எனும் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். அந்த ஆண்டு 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார்.

    அப்போது 5 லட்சம் வாக்குகளை அக்கட்சி பெற்று 8.4 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த வாக்கு சதவீதத்தை பார்த்து அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட மூக்கின் மீது விரலை வைத்து அதிசயித்தனர்.

    அதிமுக

    அதிமுக

    இதையடுத்து 2009 நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அந்த தேர்தலில் மொத்தம் 3.1 கோடி வாக்குகள் கிடைத்தன. அதன் வாக்கு சதவீதம் 10.3 சதவீதமாக இருந்தது. இதையடுத்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது.

    29 தொகுதிகள் வெற்றி

    29 தொகுதிகள் வெற்றி

    இதில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அந்த தேர்தலில் அக்கட்சி 2.9 கோடி வாக்குகளை பெற்று 7.9 சதீவதம் வாக்குகளை பெற்றது. 2014 ஆம் ஆண்டு பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்து 14 எம்பி தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக.

    2 லட்சம் வாக்குகள்

    2 லட்சம் வாக்குகள்

    இந்த தேர்தலில் தேமுதிக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. மொத்தம் 2 லட்சம் வாக்குகளை பெற்றது. வாக்குச் சதவீதம் 5.1 ஆக இருந்தது. 2016ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது அணியின் கீழ் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. ஒரு இடத்திலும் வெல்லாத தேமுதிகவின் வாக்கு சதவீதம் 2.39 சதவீதமாக சரிந்தது.

    தேமுதிக

    தேமுதிக

    இதையடுத்து 2019 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. 4 தொகுதிகளில் போட்டியிட்டு வெல்லவில்லை. இதன் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக இருந்தது.

    விஜய பிரபாகரன்

    விஜய பிரபாகரன்

    கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதற்குள் விஜய பிரபாகரன் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினார். தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை முடிவு செய்யும் கட்சியாக தேமுதிக இருக்கும் என்றெல்லாம் பேசினார். பிரேமலதாவும் தாங்கள் யாரிடம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. தனித்து போட்டியிட்டு வெல்லும் திராணி எங்களிடம் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார்.

    அமமுக

    அமமுக

    கடைசியில் பந்தாடப்பட்டு அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இதில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டார். இவர் தற்போது டெபாசிட் இழந்துள்ளார். தேமுதிகவோ தமிழகத்தில் போட்டியிட்ட 60 தொகுதிகளிலும் நோட்டாவைவிட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.

    கவலை

    கவலை

    தமிழகத்தில் நோட்டாவின் வாக்கு சதவீதம் 0.77 ஆகும். அது போல் தேமுதிக அதைவிட குறைவாக 0.45 சதவீதம் பெற்றுள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இனி தேமுதிகவின் எதிர்காலம் எந்த மாதிரி இருக்கும் என விஜயகாந்தின் நலம்விரும்பிகள் கவலையில் உள்ளனர். மேலும் தோல்விக்கு காரணம் என்ன என்பதை தேமுதிக மூத்த தலைவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

    நோட்டாவுடன் போட்டி

    நோட்டாவுடன் போட்டி

    தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பொதுவாக பாஜகதான் நோட்டாவுடன் போட்டி போடும். கடந்த 2017 இல் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் கூட நோட்டாவை விட பாஜக குறைந்த வாக்குகளையே பெற்றது. ஆனால் தற்போது பாஜகவோ அதிமுகவின் முதுகில் சவாரி செய்து 4 இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+