என்னாதிது..? விஜய் கட்சி.. பின்னாடியே அதிமுக.. அடுத்து தேமுதிக! அடுத்தடுத்து ஆலோசனை.. என்ன பிளான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் நவம்பர் 10 ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரவால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டுள்ளது.

"தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 10.11.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

dmdk premalatha vijayakanth vijay

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேமுதிகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.

அண்மையில் நடந்து முடிந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளதாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார் விஜய். மேலும், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக ஆகிய கட்சிகளை, பிரிவினைவாத கட்சி மற்றும் குடும்ப அரசியல் கட்சி என மறைமுகமாக சாடியிருந்தார் விஜய்.

ஆனால், அதிமுகவை விஜய் தாக்கி பேசவில்லை. இதனால், விஜய் அதிமுக உடன் நெருக்கம் காட்டுவதாக கருதப்பட்டது. இதனால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தவெக கூட்டணி அமையக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அதிமுக மா.செக்கள் கூட்டம் நடைபெறுவதால் தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில் தேமுதிகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறது. விஜயகாந்த் குடும்பத்தினருடன் நீண்ட கால உறவைக் கொண்டவர் விஜய். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்த்தை வைத்து பல படங்களை இயக்கியவர். எஸ்.ஏ.சிக்காக, விஜய்யின் ஆரம்பகால படங்களில் விஜயகாந்த்தும் நடித்துள்ளார். அண்மையில், தனது 'GOAT' படத்தில் AI மூலம் விஜயகாந்த் கெட்டப்பை பயன்படுத்தி இருந்தார் விஜய்.

இந்நிலையில், தவெக - அதிமுக - தேமுதிக கூட்டணி உருவாகக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், 2026 சட்டசபை தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என அறிவித்தனர். இப்போது, அந்தக் கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் நாளை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெற இருக்கும் தவெக, அதிமுக, தேமுதிக ஆலோசனை கூட்டங்கள் பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+