சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதெல்லாம் விஜயகாந்த்துக்கு தெரியுமா.. உச்சக்கட்ட வெறுப்புக்கே போய்விட்ட தொண்டர்கள்...!

பிரேமலதாவின் பேச்சு அதிருப்தியை உண்டு பண்ணி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: செம கடுப்பில் இருக்கிறார்களாம் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும்.. நடப்பதை எல்லாம் பார்த்து விரக்தி அடைந்து கிடக்கிறார்கள்..!

இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதியே அறிவித்துவிடப் போகிறார்கள்.. ஆனால், தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக யாருமே வந்து பேசவில்லை.. அதை பற்றின அறிகுறிகூட எந்த கட்சியிலும் காணோம்.

"கூட்டணி பேச்சை உடனே தொடங்குங்கள்" என்று வாய்விட்டு பிரேமலதா சொல்லியும் அதிமுக கண்டுகொள்ளவில்லை.. "எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என்று சொல்லியும், அதிமுக கண்டுகொள்ளவில்லை.. இதனால்தானோ என்னவோ, தன் பேச்சையும், தொனியையும் வேறு விதமாக திருப்பினார் பிரேமலதா..!

தேமுதிக

தேமுதிக

அதுமட்டுமல்ல, "தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை கூட்டணி. தேமுதிக தனித்து போட்டியிடுவது புதிதல்ல.. தனியாக களம் காண முடியும்... கூட்டணியில் இருந்துகொண்டு நம்முடைய வாக்குகளை வாங்கிக் கொண்டு நம் கட்சியினரையே புறக்கணிக்கிறார்கள்.. அதனால், நாம் யாருக்கும் காத்திருக்கத் தேவையில்லை.. அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது.. இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது" என்றார்.

எரிச்சல்

எரிச்சல்

இப்படி பேசி கொண்டு இருப்பதுதான் தொண்டர்களை எரிச்சலடைய வைத்து வருகிறதாம்.. அதிமுகவை பொறுத்தவரை பாமகவுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள், அந்த கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று தெரிந்தும் பிரேமலதா ஏன் இப்படி பேசுகிறார் என்ற கேள்வியை எழுப்புகிறார்களாம்.

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

கூட்டணி முடிவாகாததால், செயற்குழுவையும் கூட்டாமல், பொதுக்குழுவை கூட்ட முடியாமல் உள்ள நிலைமை விரக்தியின் உச்சிக்கே போய்விட்டதாகவும் சொல்கிறார்கள்.. ஆனால், இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், "இனியும் பொறுத்திருக்க முடியாது" என்று அதிமுகவையே மறுபடியும் மறுபடியும் சீண்டி பேசி கொண்டிருப்பது சரியல்ல என்பதே தேமுதிக நிர்வாகிகள் கருத்தாக உள்ளது. இதெல்லாம் விஜயகாந்த்துக்கு தெரியுமா? தெரியாதா? தெரியவில்லை என்றும், ஆக்கப்பூவர்மான முடிவை இனியாவது எடுத்துவிட வேண்டும் என்றும் உறுதிபட சொல்கிறார்கள்.

அவமானம்

அவமானம்

அதுமட்டுமல்ல, பாமக இருக்கும் அணியில் இடம் பெறக்கூடாது என்பதைதான் நிர்வாகிகள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறார்கள்.. ஆனால், பிரேமலதாவோ, இது கட்சி தலைமையின் முடிவு கிடையாது என்று விளக்கம் தந்து வருகிறார்.. இதுவும் நிர்வாகிகளை அப்செட் ஆக்கி வருவதாக தெரிகிறது.. இப்படி எந்த கட்சியுமே தேமுதிகவை கண்டுகொள்ளாமல் இருப்பது உச்சக்கட்ட அவமானம் என்றும், தனித்து விடப்பட்டு விட்டோம் என்பதை இனியாவது தலைமை உணர வேண்டும் என்றும் புலம்பல்கள் கேட்க தொடங்கி உள்ளதாம்.

English summary
DMDK Executives becomes upset over Premalatha speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X