கட்சி தேய்ந்து கட்டெறும்பு ஆனது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிலையை பார்த்தீங்களா?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பரிதாப நிலையில் உள்ளது. குறிப்பாக மாநகராட்சியில் ஒரு வார்டில் கூட தேமுதிக வேட்பாளர் வெற்றி பெறவில்லை.
நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவக்கினார். தற்போது உடல் நலக்குறைவால் அவர் அரசியலில் இருந்து விலகி உள்ளார். அவரது மனைவி பிரேமலதா தான் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போதைய சூழலில் அடிக்கடி கூட்டணியை தேமுதிக மாற்றி வருகிறது. தற்போது தேமுதிகவுக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என மக்கள் பிரதிநிதிகள் ஒருவரும் இல்லை.
2019 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, கடந்த சட்டசபை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்தது. தேமுதிகவின் இந்த 2 முயற்சிகளும் கைகூடவில்லை.

25 வார்டுகளில் வெற்றி
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிக தனித்து களமிறங்கியது. தேமுதிகவின் இந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. மாநகராட்சி வார்டுகளில் கட்சி வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. நகராட்சிகளில் 12 வார்டுகள், பேரூராட்சிகளில் 23 வார்டுகள் என மொத்தம் 25 வார்டுகளில் மட்டும் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நகராட்சிகள் விபரம்
நகராட்சிகளை பொறுத்தமட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வார்டு 3ல் குணசுந்தரி, நெல்லிக்குப்பம் வார்டு 20ல் கவிதா, விருத்தாசலம் வார்டு 2ல் ராஜ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு வார்டு 9ல் அஜிதா, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் வார்டு 6ல் கோகுலகிருஷ்ணன், வார்டு 7 ல் காயத்திரி சரவணன், திருச்சி முசிறி வார்டு 23ல் சுந்தரராஜ், தென்காசி மாவட்டம் சுரண்டை வார்டு 2ல் முருகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தங்கி வார்டு 21ல் ரூபினி, மதுரை மாவட்டம் திருமங்கலம் வார்டு 7 ல் சின்னசாமி, வார்டு 27 ல் ராஜகுரு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வார்டு 20ல் ராஜசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற 12 பேரில் 7 பேர் பெண்கள் ஆவார்கள்.

பேரூராட்சியில் வெற்றி
பேரூராட்சிகளை பொறுத்தமட்டில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வார்டு ஒன்றில் அன்பு, வார்டு 9ல் அஷ்டலட்சுமி, மங்கலம்பேட்டை வார்டு 15ல் உமா, லால்பேட்டை வார்டு ஒன்றில் அட்சயா தேவி, கள்ளக்குறிச்சி தியாகதூர்கம் வார்டு 14ல் ஜெகதீஸ்வரி, கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வார்டு 15ல் சதீஷ்குமார், களியக்காவிளை வார்டு ஒன்றில் சுனிதா, கோதநல்லூர் வார்டு 17 ல் டேவிட், பாகோடு வார்டு 7 ல் டென்னிஸ், ரீத்தாபுரம் வார்டு ஒன்றில் பிராங்கிளின், செங்கல்பட்டு இடைக்கழிநாடு வார்டு 6ல் வீரராகவன்,
சேலம் மாவட்டம் வீரகனூர் வார்டு 2ல் கலைச்செல்வி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

விழுப்புரம், தர்மபுரி
இவர்கள் தவிர தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வார்டு 10ல் அமுதா, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வார்டு 9 ல் குமார், வார்டு 16ல் பொன்னழகி, திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி வார்டு 8 ல் ஹக்கிம், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வார்டு 16ல் நடேஷ் அரவிந்த், திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வார்டு 11 பானு, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வார்டு 4ல் பழனிசங்கர், வார்டு 15ல் சின்னதங்கம், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வார்டு 6ல் சாவித்திரி, வார்டு 11ல் வினிதா, விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வார்டு 5ல் யுவராஜா என மொத்தம் 23 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 13 பேர் பெண்கள்.

வெற்றி சதவீதம்
கடந்த 2011ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக மாநகராட்சிகளில் 8 வார்டுகளிலும், நகராட்சிகளில் 119 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 395 வார்டுகளில் வென்றது. அத்துடன் 2 நகராட்சி, 3 பேரூராட்சிகளை கைப்பற்றி இருந்தது. மேலும் வெற்றி சதவீதமானது மாநகராட்சியில் 0.98, நகராட்சியில் 3.22, பேரூராட்சிகளில் 4.76 என்ற அளவில் இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் தேமுதிகவின் வெற்றி சதவீதமானது மாநகராட்சியில் பூஜ்ஜியம், நகராட்சிகளில் 0.31 சதவீதம், பேரூராட்சிகளில் 0.30 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

அடுத்தது என்ன
2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். ஆனால் அதன்பிறகு தேமுதிக தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. இதனால் தேய்ந்து வரும் தேமுதிக கட்சியை அதன் தலைமை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் செயலில் தீவிரமாக ஈடுபட வேண்டியது அவசியமாக உள்ளது.
-
ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி -
ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை? -
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது?












Click it and Unblock the Notifications