சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேமுதிகவில் எல்.கே.சுதீஷ் இடத்தில் விஜயபிரபாகரன்... மாற்றத்துக்கு என்ன காரணம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிகவில் எல்.கே.சுதீஷ் இடத்தில் விஜயபிரபாகரன் | DMDK Vijayakanth Son

    சென்னை: தேமுதிக இளைஞரணிச் செயலாளராக உள்ள எல்.கே.சுதீஷ் அண்மைக்காலமாக கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளாதது தேமுதிக வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.

    பிரேமலதா விஜயகாந்தின் சொந்த தம்பியான எல்.கே.சுதீஷ் சினிமா தயாரிப்பாளராக இருந்தவர். விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியதை அடுத்து சினிமா தயாரிப்பை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு வந்தார். தேமுதிக இளைஞரணிச் செயலாளராகவும், கட்சியின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார்.

    dmdk importance to vijayakanth son vijayaprabhakaran

    கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் தேமுதிக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியவர் எல்.கே.சுதீஷ். இப்படி கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் எல்.கே.சுதீஷ் முக்கிய பங்கு வகித்துவந்தார். இந்நிலையில் அண்மைக்காலமாக அதுவும் குறிப்பாக திருப்பூரில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு அக்கா மகன் விஜயபிரபாகரனுக்கு கட்சியில் வழிவிட்டு ஒதுங்கத் தொடங்கியுள்ளார் எல்.கே.சுதீஷ்.

    இதற்கு உதாரணமாக கடந்த வாரம் விஜயகாந்தை சந்தித்து நன்றி தெரிவிக்க சென்ற அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோரை விஜயபிரபாகரன் வரவேற்று அழைத்துச்சென்றதை கூறலாம். தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க எந்த தலைவர்கள் வந்தாலும் அவர்களை வாசலில் நின்று சில நாட்களுக்கு முன்பு வரை வரவேற்று அழைத்துச்சென்றவர். எல்.கே.சுதீஷ்.

    dmdk importance to vijayakanth son vijayaprabhakaran

    மேலும், அந்தச் சந்திப்பின் போதும் உடனிருந்து விஜயகாந்த்துக்கு உதவியாக இருப்பார். ஆனால் இடைத்தேர்தலில் ஆதரவு அளித்ததற்காக நன்றி கூறச் சென்ற அமைச்சர்கள் விஜயகாந்தை சந்தித்து பேசிய போது உடனிருந்தவர் விஜயபிரபாகரன். இந்த மாற்றம் தேமுதிகவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதுடன் தொண்டர்கள் மத்தியில் பேசு பொருளாகவும் உள்ளது.

    English summary
    dmdk importance to vijayakanth son vijayaprabhakaran
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X